4 ஆண்டு பிரிந்து வாழ்ந்த மனைவி: மனம் உடைந்த கணவர் தற்கொலை

4 ஆண்டு பிரிந்து வாழ்ந்த மனைவி: மனம் உடைந்த கணவர் தற்கொலை
X
போடி அருகே, மனைவி பிரிந்து வாழ்ந்ததால் மனம் உடைந்த வாலிபர், தற்கொலை செய்து கொண்டார்.

போடி, போயன்துறை ரோட்டில் வசித்தவர் பிரபு, 32. விவசாயம் செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி ஆறு ஆண்டுகள் ஆகிறது. ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கருத்து வேறுபாட்டால் இவரது மனைவி ராஜேஸ்வரி தொடர்ந்து 4 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்தார். பலமுறை சமரசம் செய்து மனைவி கணவனுடன் வாழ ஒப்புக்கொள்ள மறுத்தார்.

இதனால் மனம் உடைந்த பிரபு, விஷம் குடித்தார். தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். போடி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai based agriculture in india