மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் கணவன் தற்கொலை

மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் கணவன் தற்கொலை
X

பைல் படம்.

மனைவி குழந்தைகளுடன் கோபித்துக் கொண்டு சென்றதால் மனம் உடைந்த கணவன் தற்கொலை செய்து கொண்டார்.

தேனி வீரபாண்டி காளியம்மன்கோயில் தெருவை சேர்ந்தவர் காமுத்துரை. இவரது மனைவி திவ்யா. இவர்களுக்கு திருமணம் ஆகி 13 ஆண்டுகள் ஆகிறது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திவ்யா குழந்தைகளுடன் கோபித்துக் கொண்டு தனது தந்தை வீட்டிற்கு சென்று வி்ட்டார். மனைவியை அழைத்து வர காமுத்துரை முயற்சி செய்தும் பலன் இல்லை. இதனால் மனம் உடைந்த காமுத்துரை வீட்டில் துாக்கு மாட்டி இறந்து விட்டார். இச்சம்பவம் குறித்து வீரபாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!