வருஷநாடு சுற்றுக் கிராமங்களில் மழை - 15க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

வருஷநாடு சுற்றுக் கிராமங்களில் மழை - 15க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்
X

வருஷநாடு அருகே பாலுாத்து ஊராட்சியில் மழையால் சேதமடைந்த வீட்டை, சோகத்துடன் பார்க்கும் வீட்டினர். 

தேனி மாவட்டம், வருஷநாடு மலைப்பகுதியில் பெய்த மழையால், சுற்றுக்கிராமங்களில் உள்ள 15க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளன.

தேனி மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களாக மழை பெய்து வருகிறது. மழையில் இதுவரை 75க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமாகி உள்ளன. இவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதுபோல், கடந்த ஒரு வாரமாக மேகமலை வனப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வருஷநாடு மற்றும் சுற்றுக்கிராமங்களில், இரண்டு நாளில் பல வீடுகள் இடிந்துள்ளன. தோராயமாக 15க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்திருக்கலாம்; மழை நின்ற பின்னர், இடிந்த வீடுகளை கணக்கெடுத்து நிவாரணம் வழங்கப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
ai in future agriculture