நல்ல காலம் பொறந்திருச்சு...வாழை வியாபாரிகளுக்கு...

Banana Price Per Kg - வைகாசி பிறந்தது முதல் முகூர்த்தங்கள் களைகட்டி வருகின்றன. ஏற்கனவே கோயில் திருவிழா அதிகளவில் நடந்து வரும் நிலையில் திருமண முகூர்த்தங்களும் அதிகரித்துள்ளதால் வாழை இலை, வாழைப்பழத்தின் தேவை அதிகரித்துள்ளது.
தேனி மாவட்டத்தை பொறுத்தவரை வாழை மிகவும் முக்கிய விவசாயம். 16 ஆயிரம் ஏக்கரில் வாழை சாகுபடி நடந்து வருகிறது. வாழை சாகுபடியால் பலர் கோடீஸ்வரர்களாகி இருந்தனர். கடந்த கொரோனா காலத்தில் வாழை சாகுபடி செய்த பலர் பெரும் நஷ்டத்திற்கும் உள்ளாகி விட்டனர். இந்நிலையில் கொரோனா லாக்டவுன் முடிவுக்கு வந்த பின்னரும் வாழை விவசாயிகளுக்கு பெருமளவில் விலை கிடைக்கவில்லை.
இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக கோயில் திருவிழாக்கள் களை கட்டியதால் வாழைப்பழம், வாழை இலைகளின் விலை சற்று அதிகரித்தது. தற்போது வைகாசி மாதம் வந்து விட்டதால், திருமண மற்றும் இதர விசேஷங்களும் அதிகரித்துள்ளதால் வாழை இலை விலை சக்கைபோடு போடுகிறது. 36 மடி கொண்ட ஒரு கட்டு வாழை இலையின் விலை நேற்று மாலை 2000ம் ரூபாயினை எட்டியது.
அதேபோல் வாழைப்பழத்தின் விலைகளும் அதிகரித்துள்ளது. நாழிப்பூவன் பழம் கிலோ 40 ரூபாய் வரையும், செவ்வாழை விலை கிலோ 45 ரூபாய் வரையும், ஜி.9 வாழைப்பழம் கிலோ 25 ரூபாய் வரையும், நேந்திரன் பழம் கிலோ 40 ரூபாய் வரையும் விற்கப்படுகிறது. சில்லரையில் இதன் விலை இன்னும் சற்று அதிகம். எனவே வாழை விவசாயிகளுக்கு நல்ல காலம் பொறந்து விட்டதாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu