சாக்கடையில் மூழ்கி கிடக்கும் தேனி: பா.ஜ.க. நிர்வாகி தர்ணா
சாக்கடை குளத்தில் மூழ்கிய கோட்டைக்களம், உழவர்சந்தை, நியூஸ்ரீராம் நகர் பகுதிகளை சரி செய்ய வலியுறுத்தி பா.ஜ., கூட்டுறவு பிரிவு மாநில தலைவர் சிவக்குமரன் (நீலக்கலர் சட்டை சிவப்பு துண்டு) தலைமையில் அப்பகுதியினர் நகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா செய்தனர்.
BJP Party Members- தேனியில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழையில் அல்லிநகரம் பகுதியில் இருந்து வந்த சாக்கடை நீர் நியூஸ்ரீராம் நகர், கோட்டைக்களம், உழவர்சந்தை பகுதிக்குள் புகுந்தது. இப்பகுதியில் தேங்கிய சாக்கடையால் பெரும் துர்நாற்றம் வீசியது. மக்கள் நடமாடவே முடியவில்லை.
இதனை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி, பா.ஜ., கூட்டுறவு பிரிவு மாநில தலைவர் சிவக்குமார் உட்பட இப்பகுதியை சேர்ந்த சிலர் தேனி நகராட்சி அலுவலகம் முன்பு தர்ணா நடத்தினர். அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி கழிவுநீரை வெளியேற்ற உறுதி அளித்ததை தொடர்ந்து தர்ணாவை வாபஸ் பெற்றனர்.
இது குறித்து சிவக்குமரன் கூறியதாவது: தேனியில் கோட்டைக்களம், உழவர்சந்தை, நியூஸ்ரீராம்நகர் பகுதியில் ஒரு வாரத்திற்கும் மேலாக கழிவுநீர் குடிநீரில் கலந்து விநியோகமாகிறது. துர்நாற்றத்துடன் காணப்படும் குடிநீரை பயன்படுத்த முடியவில்லை. இது பற்றி எடுத்து சொல்லியும் நகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை. இப்போது கழிவுநீர் இப்பகுதிகளை மூழ்கடித்து விட்டது.
மிகுந்த சாக்கடை சகதி, குப்பைகள், கழிவுநீர் என இப்பகுதி அலங்கோலமாகி விட்டது. இதனை சரி செய்யுமாறு நாங்கள் அமைதியான முறையில் நகராட்சி நிர்வாகம் முன்பு அமர்ந்து தர்ணா நடத்தினோம். அதிகாரிகள் அதன் பின்னர் கழிவுநீரை வெளியேற்றி இப்பகுதியை சீரமைத்தனர் என்றார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu