பொங்கலுக்கு ரயிலில் சொந்த ஊர் செல்பவர்களா நீங்கள்? முதலில் இதனை படியுங்கள்

பொங்கலுக்கு ரயிலில்  சொந்த ஊர்  செல்பவர்களா நீங்கள்? முதலில் இதனை படியுங்கள்
X
பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்பவர்களுக்கான ரயில் முன்பதிவு அட்டவணை இங்கு தரப்பட்டு உள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்பாகவே இரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது.

ரயில் டிக்கெட் முன்பதிவு நாள் ------- பயண நாள் --- பயண கிழமை

செப்டம்பர் 12 ----- ஜனவரி 10- 2025 ---- வெள்ளிக்கிழமை

செப்டம்பர் 13 ----- ஜனவரி 11-2025 ----- சனிக்கிழமை

செப்டம்பர் 14 ----- ஜனவரி 12-2025 --- ஞாயிறு

செப்டம்பர் 15 --- ஜனவரி 13-2024 -- திங்கள் -- போகிப் பண்டிகை

செப்டம்பர் 16 --- ஜனவரி 14-2025 -- செவ்வாய் -- தைப்பொங்கல் தினம்

செப்டம்பர் 17 -- ஜனவரி 15-2025 -- புதன் -- மாட்டுப்பொங்கல், திருவள்ளுவர் தினம்

செப்டம்பர் 18 -- ஜனவரி 16-2025 -- வியாழன் - உழவர் திருநாள்

வட இந்திய ரயில்களுக்கு முன்பதிவு தேதியில் 1 அல்லது 2 நாட்களுக்கு மாறுதல்கள் ஏற்படும். பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊருக்குச் செல்ல விரும்புகிறவர்கள், ரயில் கால அட்டவணையின்படி, திட்டமிட்டு முன்பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்து கடைசி நேர நெருக்கடியை தவிர்க்கவும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!