ஆஸ்துமாவில் இருந்து விடுபட உதவும் வீட்டு மருத்துவம்

ஆஸ்துமா எப்போது வரும் என்றெல்லாம் சொல்ல இயலாது, குளிர் அதிகமானாலும் வரும், சிலருக்கு கோபமோ அல்லது மனக் கவலையோ அதிகரித்தால் கூட வரும். இதற்கான தீர்வு தான் என்ன. இருக்கிறது சுலபமாக வீட்டில் இருந்தபடியே இதற்கான தீர்வினை அடைய முடியும். வாருங்கள் அதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்...
கற்பூரம்: மூச்சுத் திணறல் ஏற்படும் போது, கடுகு எண்ணெயில் கொஞ்சம் கற்பூரத்தை கரைத்து, நெஞ்சுப் பகுதியில் நன்கு தேய்த்து விடுவது ஆஸ்துமாவிற்கு நல்ல பலனளிக்கும். மற்றும் இது கபத்தை குறைக்கவும் உதவுகிறது.
ஓமம்: சுடு தண்ணீரில் ஓம விதைகளை கலந்து நன்கு ஆவிப் பிடித்தல், மூச்சுக்குழாயை விரிவடையச் செய்கிறது. இதன் மூலம் மூச்சுத் திணறல் குறைய நிறைய வாய்ப்புள்ளது.
சுடு தண்ணீர் குளியல்: மூச்சுத் திணறல் ஏற்படும் போது சுடு தண்ணீரில் குளிப்பது மூச்சு திணறலைக் குறைக்கும். கை, கால், இடுப்பு மற்றும் நெஞ்சுப் பகுதிகளில் நன்கு சுடு தண்ணீர் ஊற்றி குளிப்பது தேகத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கிறது மற்றும் நுரையீரல் பகுதிக்கு நிவாரணம் அளிக்க உதவும்.
தேன்: ஆஸ்துமா சிகிச்சைக்கு, தேன் ஒரு சிறந்த நன்மை விளைக்கும் பொருள் ஆகும். தேனை நேரடியாகவோ, அல்லது பால் மற்றும் தண்ணீரிலோ கலந்து பருகுவது நன்கு பயனளிக்கும். தேன் சுவாசக் கோளாறுகளுக்கு சிறந்த வகையில் பயனளிக்கும் உணவுப் பொருளாகும். மற்றும் கபத்தில் இருந்து விடுபடவும் தேன் உதவுகிறது. ஒரு வருடம் தொடர்ந்து தேன் உண்டு வந்தால் சுவாசக் கோளாறுகளில் இருந்து முழுமையாக விடுபட இது உதவும்.
பூண்டு மற்றும் கிராம்பு: பூண்டு மற்றும் கிராம்பினை தினமும் காலை பாலில் கலந்து பருகி வந்தால், ஆரம்ப கட்டத்தில் இருக்கும் ஆஸ்துமாவை குணப்படுத்த இயலும் என மருத்துவ வல்லுனர்கள் கூறுகின்றனர்.
மஞ்சள்: ஆஸ்துமாவிற்கு, மஞ்சள் நல்ல நிவராணம் அளிக்கக் கூடியது ஆகும். தினமும் இரண்டு அல்லது மூன்று வேளை ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூளை பாலில் கலந்து பருகி வந்தால், ஆஸ்துமாவிற்கு நல்ல பயனளிக்கும். மற்றும் இதை காலை வெறும் வயிற்றில் பருகுவது உடலுக்கு மிகவும் நல்லது ஆகும்.
இஞ்சி: காபியில், ஒரு தேக்கரண்டி இஞ்சி ஜூஸுடன் சிறிதளவு வெந்தயம் மற்றும் சுவைக்காக தேனும் கலந்து பருகுவது நல்லது. இந்த கலவை கபத்திற்கு தலைச்சிறந்த தீர்வாக கருதப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu