முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்.,நீச்சல் பழகிய தொட்டி..! இப்ப பாருங்க..?!

முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்.,நீச்சல் பழகிய தொட்டி..!  இப்ப பாருங்க..?!
X

பெரியகுளம் தீர்த்ததொட்டி பராமரிப்பு இல்லாததால் மிகவும் அழுக்கடைந்து சாக்கடை தொட்டியாக மாறி உள்ளது.

முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். நீச்சல் பழகிய பெரியகுளம் தீர்த்த தொட்டி தற்போது மிகவும் அசுத்தமான நிலையில் காணப்படுகிறது.

பெரியகுளம் தீர்த்ததொட்டிக்கு மிகப்பெரிய வரலாறு உள்ளது. எந்த காலத்திலும் இதில் தண்ணீர் வற்றுவதே கிடையாது. மிகவும் சுவை மிகுந்த தண்ணீர். இப்பகுதியில் உள்ள கோயில்களுக்கு இங்கிருந்து தான் தீர்த்தம் எடுப்பார்கள். இந்த தீர்த்த தொட்டியில் சினிமா படப்பிடிப்புகள் அதிகளவில் நடைபெற்றுள்ளன. குறிப்பாக இயக்குனர் பாலாவின் பிதாமகன் படத்தில் நடிகர்கள் விக்ரம், சூர்யா நடித்த இளங்காற்று வீசுதே... என்ற பாடல் இங்கு தான் படமாக்கப்பட்டது.

இந்த தொட்டியில் நடிகர்கள் மேஜர் சுந்தர்ராஜன், எஸ்.எஸ்.ஆர்., முதல் தற்போதைய இயக்குனர் பாலா, முன்னாள் தமிழக முதல்வரும், அ.தி.மு.க.,வின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பி.எஸ்., உட்பட பல ஆயிரம் வி.வி.ஐ.,பிக்கள் நீச்சல் பழகி உள்ளனர். பெரியகுளத்தில் பல நுாறு ஆண்டுகளுக்கு மேல் இந்த தொட்டி இருந்து வருகிறது.

இவ்வளவு புகழ்வாய்ந்த இந்த தீர்த்த தொட்டியில் தற்போதும் இளைஞர்கள் நீச்சல் பழகுகின்றனர். ஆனால் சுத்தமாக பராமரிக்கப்பட வேண்டிய தீர்த்த தொட்டி, மிகவும் அசுத்தம் நிறைந்த அழுக்கு தொட்டியாக மாறி உள்ளது. பெரியகுளத்தில் உள்ள இந்த வரலாற்று சின்னத்தை புதுப்பித்து அழகாக பராமரிக்க வேண்டும் என பெரியகுளம் பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!