தேனி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை

தேனி மாவட்டத்தில் இன்று  பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை
X
தேனி மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையால் இன்று பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று முழுவதும் பலத்த மழை பெய்தது. இரவிலும் மழை நீடித்தது. கூடலுாரில் 71.4 மி.மீ., தேனி அரண்மனைப்புதுாரில் 60.4 மி.மீ., தேனி வீரபாண்டியில் 68 மி.மீ., கூடலுாரில் 71.4 மி.மீ., மஞ்சளாறில் 78 மி.மீ., போடியில் 37.2 மி.மீ., உத்தமபாளையத்தில் 52.7 மி.மீ., மழை பதிவானது.

இன்றும் மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக தேனி கலெக்டர் முரளீதரன் அறிவித்துள்ளார்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா