சின்னமனூர் அருகே கோயில் இடிக்கப்படுவதை தடுத்த இந்து எழுச்சி முன்னணி

சின்னமனூர் அருகே கோயில் இடிக்கப்படுவதை தடுத்த  இந்து எழுச்சி முன்னணி
X

சின்னமனுார் அருகே சீப்பாலக்கோட்டையில் கலெக்டர் முரளீதரன் கோயில் நிலத்தை ஆய்வு செய்தார்.

தேனி மாவட்டம், சின்னமனுார் அருகே கோயில் இடிக்கப்படுவதை இந்து எழுச்சி முன்னணி நிர்வாகிகள் தடுத்து நிறுத்தினர்.

தேனி மாவட்டம், சின்னமனுார் அருகே உள்ள சீப்பாலக்கோட்டை கிராமத்தில் ஸ்ரீ சாத்தாவுராயன், ஸ்ரீ எர்ரம்மாள், ஸ்ரீ திம்மம்மாள் கோயில் உள்ளது. சிலர் கோயிலை பற்றி கோர்ட்டில் தவறான தகவல்களை அளித்து கோயிலை இடிக்க முயற்சி செய்தனர்.

நீதிமன்ற உத்தரவுப்படி தேனி கலெக்டர் முரளீதரன் கோயிலை ஆய்வு செய்தார். அப்போது இந்து எழுச்சி முன்னணி நிர்வாகிகள் பங்கேற்று கலெக்டரிடம் கோயில் அமைப்பு, கோயில் வரலாறு, அமைந்துள்ள இடம், வழிபடும் மக்கள் பற்றிய விவரம், வழிபாட்டு முறைகள் குறித்து விளக்கினர். இவற்றை முழுமையாக ஆய்வு செய்த கலெக்டர் முரளீதரன் கோயில் இடிக்கப்படாது என உறுதி அளித்தார்.

Tags

Next Story
ai marketing future