தேனியில் சபாநாயகரை கண்டித்து இந்து எழுச்சி முன்னணி ஆர்ப்பாட்டம்
தேனியில் சபாநாயகரை கண்டித்து இந்து எழுச்சி முன்னணியினர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கடந்த 24ம் தேதி திருச்சி புனித பவுல் மருத்துவக் கல்லூரி நூற்றாண்டு விழாவில் தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு பொது மேடையில் பேசும் போது, தமிழக அரசு ஆனது நீங்கள் கொடுத்தது என்றும், தமிழக பாதிரியார்களுக்கு சொந்தமானது என்றும் தயக்கமில்லாமல் உங்கள் கோரிக்கையை முதல்வரிடம் முறையிடுங்கள் என்றும், தன்னுள் மறைத்து வைத்திருந்த மதபிரிவினையை காட்டும் விதமாக பொது மேடையில் பேசி வெளிப்படுத்தியிருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினருக்கும் பொதுவாக இருந்து மக்கள் சேவை செய்வார் என்ற நம்பிக்கையில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்து அனுப்பிய திருநெல்வேலி ராதாபுரம் தொகுதி இந்துசமுதாய மக்களுக்கு துரோகம் செய்துவிட்டார். இவரது பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும் எனவே தமிழக கவர்னர் இவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தேனி மாவட்ட ஆட்சியர் மூலமாக மனு கொடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் இந்து எழுச்சி முன்னணியின் தேனி நகர செயலாளர் அரண்மனை முத்துராஜ் தலைமையில் இந்து எழுச்சி முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி உள்ளிட்ட பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டு சபாநாயகர் அப்பாவு - வை கண்டித்து கோஷங்கள் எழுப்பி கட்டண ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரை சந்தித்து மனு கொடுத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu