தேனியில் விநாயகர் சதுர்த்தி விழா பற்றி இந்து எழுச்சி முன்னணி ஆலோசனை

தேனியில் விநாயகர் சதுர்த்தி விழா பற்றி இந்து எழுச்சி முன்னணி ஆலோசனை
X

தேனி இந்து எழுச்சி முன்னணி வாரவழிபாட்டு மன்ற கூட்ட அரங்கில் நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.

தேனி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவினை சிறப்பாக கொண்டாடுவது பற்றி இந்து எழுச்சி முன்னணி ஆலோசனை கூட்டம் நடந்தது.

தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி ஆலோசனை கூட்டம், வாரவழிபாட்டு கூட்டம் மாவட்ட தலைவர் ராமராஜ்ஜீ தலைமையில் தேனி அலுவலகத்தில் நடைபெற்றது. நகர பொருளாளர் ராஜேஷ்குமார்ஜீ, நிர்வாகிகள் ராமமூர்த்திஜீ, கோவிந்தராஜ்ஜீ உட்பட பலர் பங்கேற்றனர்.ஒவ்வொரு ஆண்டும் இந்து எழுச்சி முன்னணி சார்பில் விநாயகர்சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்படும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு பெரும் இடையூறாக அமைந்தது.

இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பின்னர் கொரோனாவிற்கு பிந்தைய சூழலில் வரும் விநாயகர்சதுர்த்தி விழாவை இதுவரை இல்லாத அளவு சிறப்பாக நடத்த வேண்டும். இதற்கென திட்டமிடவும், செயல்பாட்டு முறைகளை வகுக்கவும் வரும் 24ம் தேதி இந்து எழுச்சி முன்னணியின் ஆலோசனைக்கூட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யவும், மாநிலம் முழுவதும் உள்ள நிர்வாகிகளை வரவழைக்கவும் முறையான ஏற்பாடுகளை செய்ய நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Tags

Next Story