தேனியில் உலக அமைதிக்காக இந்து எழுச்சி முன்னணி வழிபாடு

தேனியில் உலக அமைதிக்காக இந்து எழுச்சி முன்னணி வழிபாடு
X

தேனி கண்ணாத்தா கோயிலில் இந்து எழுச்சி முன்னணியின் தலைமை நிர்வாகிகள் வழிபாடு நடத்தினர்.

தேனியில் உள்ள கோயில்களில் உலக அமைதிக்காக இந்து எழுச்சி முன்னணி வழிபாடு நடத்தியது.

தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள திருக்கோவில்களில் பங்குனி உற்சவ திருவிழா நடந்து வருகிறது. தேனி பாரஸ்ட் ரோடு 5வது தெரு ஸ்ரீமுத்தாலம்மன் திருக்கோவில், தேனி எம் ஜிஆர் நகர் ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில், தேனி TVS ரோடு ஸ்ரீ கண்ணாத்தாள் திருக்கோவில் அல்லிநகரம் அம்பேத்கர் நடுத்தெரு சடையாண்டி திருக்கோவில், அல்லிநகரம் போய நாயக்கர் தெரு, ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில், பொம்மையகவுண்டன்பட்டி ஸ்ரீசாத்தாவுராயன் திருக்கோவில் ஆகிய கோவில்களில் தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி பொறுப்பாளர்கள் உலக அமைதி வேண்டி சிறப்பு வழிபாடுகள் செய்து வேண்டிக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணியின் மாவட்ட நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி