தேனி மாவட்டத்தில் போலி மது விற்பனையை தடுக்க இந்து எழுச்சி முன்னணி மனு
தேனியில் மனு கொடுத்த இந்து எழுச்சி முன்னணி நிர்வாகிகள்.
இந்து எழுச்சி முன்னணி தேனி நகர பொதுச் செயலாளர் சிவராம் ஜீ தலைமையில் தேனி கலெக்டர் ஷஜீவனாவிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டில் கள்ளச்சாராயத்தை மட்டும் ஒழித்தால் போதாது முற்றிலும் மது இல்லாத மாநிலமாக தமிழகத்தை கொண்டு வரவேண்டும்.
மேலும் கள்ள சந்தையில் விற்கப்படும் மதுக்களை தடுக்க வேண்டும். பல்வேறு பெயர்களில் போலி மதுபானங்கள் தயாரிக்கப்பட்டு நேரடியாக கடைகளுக்கே மறைமுகமாக கள்ள சந்தையில் தமிழகம் முழுவதும் விற்கப்படுகிறது. கள்ள மது ஆலைகளை கண்டுப்பிடித்து விரைவில் மூட வேண்டும்.
கள்ள மது தொழிலில் ஈடுபட்டு வந்தவர்களை கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும். கள்ளமது, கள்ளச்சாராயத்தை காய்ச்சியவர்கள், விற்பனை செய்யும் நபர்கள் மீது கொடுக்கும் தண்டனையை கடுமையாக்க வேண்டும். கள்ளச்சாராயம் குடித்து இறக்கும் குடும்பத்தினருக்கு அரசு நிதி வழங்குவதை நிறுத்த வேண்டும்.
பாதிப்படைந்தால்அவர்களுக்கு அரசு எந்த நிதியுதவியும் செய்யக்கூடாது. தேனி மாவட்டத்தில் தனியார் மது ஆலை ஒன்று போலி மது பாட்டிங்களை தயார் செய்து நேரிடையாக கடைகளுக்கு சப்ளை செய்து பல்லாயிரம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி வருவதோடு போலி மதுக்களை குடிக்க வைத்து மதுபிரியர்கள் உடல்நலத்தை பாதிப்படைய செய்து வருவதாக தகவல் வருகிறது எனக்கூறப்பட்டது.
இந்து எழுச்சி முன்னணியின் நிர்வாகிகள் நகர தலைவர் செல்வப்பாண்டியன், நகர அமைப்பாளர் அரண்மனை முத்துராஜ், நகர துணைத்தலைவர்கள் நாகராஜ் , சிவா, நகர செயலாளர் தினேஷ் , நகர துணைச்செயலாளர்கள் கனகுபாண்டி, அழகுபாண்டி, சரவணன், நகர செயற்குழு உறுப்பினர் ராமநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu