நாடகமாடும் தமிழக முதல்வர் - இந்து எழுச்சி முன்னணி காட்டம்!
இந்து எழுச்சி முன்னணி கூட்டம் நடந்தது.
தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி அலுவலகத்தில் வார வழிபாட்டு கூட்டம் நடந்தது. விநாயகர் துதி தேசபக்தி பாடல் மற்றும் இறை நாமாவளியுடன் கூட்டம் துவங்கி நடைபெற்றது.
தேனி நகர தலைவர் செல்வபாண்டியன் தலைமை வகித்தார். தேனி நகர துணை செயலாளர் கனகு பாண்டி முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் விஷ்வா பாலமுருகன் வழிநடத்தினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
தீர்மானம் :1
தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணியின் பொதுக்குழு கூட்டம் வருகின்ற 24.11.2024 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சின்னமனூரில் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது
தீர்மானம்: 2
சமீபநாட்களாக தமிழகத்தின் முதல்வர் தொலைக்காட்சிகள் வழியாக மக்களிடம் போதையில்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்று விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறார். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஊர்களிலும் மதுபான கடைகளை திறந்து வைத்துக்கொண்டு போதையின் பாதையில் யாரும் செல்ல வேண்டாம் என்று கூறி தமிழக மக்களை ஏமாற்றி விளம்பரம் செய்வது குழந்தையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகின்ற நாடக கதையாக உள்ளது. முதல்வர் தேர்தல் வாக்குறுதி அளித்தது போல தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் நிரந்தரமாக மூட வேண்டும் என தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்துகிறது.
தீர்மானம் : 3
உலகப் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு விரதம் இருந்து செல்லும் பக்தர்கள் அங்கு உடல்நலக் குறைவு மற்றும் வேறு ஏதேனும் காரணத்தினால் உயிர் துறக்க நேரிட்டால் அவர்களது குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் காப்பீடு தொகையாக வழங்கப்படும் என அறிவித்த சபரிமலை சுவாமி ஐயப்பன் தேவசம் போர்டுக்கு தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது. ஜெய் ஸ்ரீராம் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu