தேனியில் ரயில்வே மேம்பாலம்: இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்தல்
தேனியில் நடந்த இந்து எழுச்சி முன்னணியின் வாரவழிபாட்டு கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி அலுவலகத்தில் வார வழிபாடு நடைபெற்றது. தேனி நகர செயலாளர் புயல் ஐயப்பன் தலைமை வகித்தார். தேனி நகர துணைத்தலைவர் எஸ்.எஸ்.நாகராஜ் முன்னிலை வகித்தார். தேனி நகர பொதுச் செயலாளர் சிவராமன் வழிநடத்தினார்.
இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி 20/20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடி 2024 ஆம் ஆண்டிற்கான சாம்பியன் பட்டத்தை வென்ற நமது இந்திய கிரிக்கெட் அணிக்கு தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
தேனியின் பிரதான சாலையான பெரியகுளம் சாலையில் அமைந்துள்ள ரயில்வே கிராசிங்கில் இரயில் வரும் பொழுது எல்லாம் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். ரயில்வே கேட் போட்டவுடன் இரு புறங்களிலும் உள்ள வாகன ஓட்டிகள் சாலையின் இடது புறமாக மட்டும் நிற்காமல் சாலையின் வலது புறமாகவும் நிற்பதால் ரயில்வே கேட் திறந்தவுடன் எந்த வாகனமும் செல்ல முடியாமல் முட்டி மோதிக் கொள்கின்றார்கள்.
இதனால் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இரயில் வரும் பொழுது இரு புறங்களிலும் போக்குவரத்து காவலர்கள் நின்று போக்குவரத்தை சீர் செய்து மக்களுக்கு சிரமம் இல்லாத பயணத்தை ஏற்படுத்தி தர வேண்டும்.
மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தவிர்க்க விரைவில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என தேனி மாவட்ட நிர்வாகத்தை இந்து எழுச்சி முன்னணி கேட்டுக்கொள்கிறது என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu