தர்மபுரி எம்.பி.,யை கண்டித்து தேனியில் இந்து எழுச்சி முன்னணி ஆர்ப்பாட்டம்
தர்மபுரி எம்.பி.யை கண்டித்து தேனி கலெக்டர் அசுவலகம் முன்பாக இந்து எழுச்சி முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கடந்த 2019 ஆம் ஆண்டு தர்மபுரியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.செந்தில்குமார் எம்.பி., கடந்த ஆண்டு அரசு விழாவில் காலம் காலமாக செய்து வந்த பூமி பூஜையை செய்யக்கூடாது எனவும், இது திராவிட மாடலுக்கு எதிரானது என்றும் பூமி பூஜையை ஏற்பாடு செய்த அரசு அதிகாரிகளை பொது வெளியில் திட்டி காயப்படுத்தினார்.
இதனை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பாக பத்திரிகையாளர்கள் பேட்டியில் வடமாநிலங்களில் முருகன் வழிபாடு இல்லை. அங்கு விநாயகருக்கு பிறகு சிவன், பார்வதி குடும்ப கட்டுப்பாடு செய்தனரா? என்று கேள்வி எழுப்பி தொடர்ந்து இந்துக்களின் நம்பிக்கை உள்ள கடவுள்கள் சிவன், பார்வதியை இழிவுபடுத்தும் விதமாக பேசி பெரும்பான்மையாக வசிக்கும் இந்துக்களின் மனதை புண்படுத்தி வருகிறார்.
இதுபோன்று தொடர்ந்து இந்து மதக்கடவுளையும் சடங்குகளையும் மிகவும் இழிவுபடுத்தி வரும் எம்.பி செந்தில்குமாரை பதவி நீக்கம் செய்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி இந்து எழுச்சி முன்னணி மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி ஜீ தலைமையில் தேனி கலெக்டர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டம் முடிந்ததும், தமிழக கவர்னருக்கு அனுப்பி வைக்க மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதியிடம் மனு கொடுக்கப்பட்டது. இவர்களுடன் மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ் ஜீ, மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் ஜீ, உத்தமபாளையம் ஒன்றிய தலைவர் கோம்பை இளம்பருதி ஜீ, பெரியகுளம் ஒன்றிய செயலாளர் குமரேசன் ஜீ, கம்பம் இந்து எழுச்சி முன்னணி பொறுப்பாளர் மணிபிரபு ஜீ, நகர தலைவர் செல்வபாண்டியன் ஜீ, நகர பொருளாளர் நாகர்கோயில் ராஜேஷ்குமார் ஜீ, நகர துணை தலைவர்கள் நாகராஜன் ஜீ, சிவா ஜீ நகர செயலாளர்கள் ஜீவா ஜீ, தினேஷ் ஜீ புயல் அய்யப்பன் ஜீ, நகர துணை செயலாளர்கள் ராசி பிரியாணி சீனிவாசன் ஜீ, ரெங்கராஜ் ஜீ கனகுபாண்டி ஜீ, மணிகண்டன் ஜீ செயற்குழு உறுப்பினர் ரூபாகரன் ஜீ ஆகியோர்கள் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu