ரூ.10க்கு உயர் மருத்துவ சிகிச்சை: சுயே., வேட்பாளர் வி.ஆர்.ராஜன் வாக்குறுதி

ரூ.10க்கு உயர் மருத்துவ சிகிச்சை: சுயே., வேட்பாளர் வி.ஆர்.ராஜன் வாக்குறுதி
X

தேனி நகராட்சி 4வது வார்டு சுயேட்சை வேட்பாளர் வி.ஆர்.ராஜன்.

மருத்துவ வசதி கிடைக்காமல் ஒரு உயிர் கூட இழக்க அனுமதிக்க மாட்டேன் என தேனி நகராட்சி 4வது வார்டு சுயே., வேட்பாளர் வி.ஆர்.ராஜன் தெரிவித்துள்ளார்.

தேனி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதில் 4வது வார்டில் வி.ஆர்.,ராஜன் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.

இவர் தனது சேவைகள், வாக்குறுதிகள் குறித்து கூறுகையில், நான் போட்டியிடும் 4வது வார்டில் 16 தெருக்கள் உள்ளன. நான் வெற்றி பெற்றதும் ஒரு வார்டிற்கு இரண்டு தன்னார்வலர்களை நியமிப்பேன். இவர்களுக்கு 24 மணி நேர பணி வழங்கப்படும்.

வார்டு மக்களுக்கு தேவையான பணிகளை செய்து தருவது மட்டுமே இவர்களது வேலை. இதற்காக எனது வார்டில் கவுன்சிலர் அலுவலகம் தனியாக திறக்கப்படும். இந்த அலுவலகத்துடன் இணைந்து இந்த 32 தன்னார்வலர்களும் பணிபுரிவார்கள்.

எனது மகன் மருத்துவ முதுகலை உயர்படிப்பு படித்த டாக்டர். இதனால் வார்டு மக்களுக்கு என் மகன் மூலம் மருத்துவமனை தொடங்கி 10 ரூபாய் கட்டணத்தில் மருத்துவ சேவை வழங்குவேன்.

நான் தொழிலதிபர், எனக்கு வருவாய் வருகிறது. எனது மனைவி ஆசிரியை. மகன் டாக்டர். எனவே நான் லஞ்சம் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. எனது வருமானத்தில் 50 சதவீதம் பொதுச்சேவைக்கும், 50 சதவீதம் குடும்பத்திற்கும் என பிரித்து வைத்தே பல ஆண்டுகளாக மக்கள் பணி செய்து வருகிறேன்.

இனிமேலும் எனது சொந்த வருவாயி்ல் பாதியை எனது வார்டு மக்களுக்கு வழங்குவேன். குடிநீரின் மூலம் பரவும் நோய்களை முற்றிலும் ஒழிப்பேன். இதற்காக எனது சொந்த செலவில் மிகப்பெரிய ஆர்.ஓ., பிளாண்ட் அமைத்து, வார்டு மக்களுக்கு வீடு தோறும் தினமும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவேன். குடிநீர் பிடிப்பதற்கு நவீன டிஜிட்டல் அட்டைகளை வார்டு மக்களுக்கு இலவசமாக வழங்குவேன். இதற்கென குடிநீர் வழங்கல் கட்டமைப்பை தேவையான பணியாளர்களுடன் அமைப்பேன்.

வார்டு முழுக்க கண்காணிப்பு கேமரா பொறுத்தி, 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைத்து, சட்டவிரோத நிகழ்வுகள் எதுவும் நடைபெறாத வகையில் தடுப்பேன். என் வார்டு குழந்தைகள் முதல் மாணவ, மாணவிகள் வரை இலவசமாக படிக்க இலவச ஸ்மார்ட் டியூசன் சென்டர் அமைப்பேன்.

அந்த சென்டரில் படிக்கும் அனைவருக்கும், இந்தியாவின் உயர் கல்வித்துறை வழங்கும் அத்தனை வாய்ப்புகளையும் உருவாக்கி கொடுப்பேன். நான் தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு செயலாளராக இருப்பதால், உயர் அதிகாரிகள், உயர் மட்ட அரசியல் பிரமுகர்களை சந்தித்து எனது வார்டு மக்களுக்கு தேவையான மத்திய, மாநில அரசு திட்டங்களை பெற்றுத்தருவேன்.

மேலும் 81007 47777 என்ற நம்பருக்கு மிஸ்டு கால் கொடுத்தால் போதும். இது ஒரு தானியங்கி தொழில்நுட்பம் மிஸ்டுகால் கொடுத்ததும், அழைத்தவர்களுக்கு மெசேஜ் சென்று விடும். அழைத்தவர்கள் யார், எந்த எண்ணில் அழைத்தார்கள் என்ற விவரம், எனது அலுவலகத்தில் நான்கு பேருக்கு சென்று விடும். உடனே அவர்கள் அந்த நம்பரை தொடர்பு கொண்டு அவர்களது கோரிக்கையினை கேட்டு உதவி செய்வார்கள்.

உயிர்காக்கும் மருத்துவம் வழங்குவதில் முதல் நிலையை எட்டிப்பிடிப்பேன். மருத்துவ சிகிச்சை கிடைக்காமல், ஒரு உயிரை கூட இழந்து விடக்கூடாது என்பது எனது வாழ்வியல் கொள்கை ஆகும். அதேபோல் ஊழலை முழுமையாக ஒழித்து, மக்களுக்கு தரமான கட்டமைப்பு வசதிகளை வழங்குவேன். கவுன்சிலர் என்ற அதிகாரத்திற்கு உட்பட்டும், எனது சொந்த முயற்சிகள் மூலமும் எனது வார்டு மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
பவானிசாகர் அணையில் நீர்மட்டம் குறைவு..! விவசாயிகளின் கவலை அதிகரிப்பு..!