தும்மலப்பட்டி ஊராட்சியில் மூலிகை பண்ணை அமைப்பு
திருச்சி தோட்டக்கலை கல்லுாரி மாணவிகள் பசுமை பதிலை அறக்கட்டளையுடன் இணைந்து ஜி.தும்மலப்பட்டியில் மூலிகை தோட்டம் அமைத்தனர்.
வத்தலக்குண்டு அருகே ஜி.தும்மலப்பட்டி பசுமை பதிலை அறக்கட்டளை சார்பில் ஊராட்சி மன்ற கட்டடம் அருகே மூலிகை பண்ணை அமைக்கும் பணிகள் தொடங்கின. ஜி.தும்மலப்பட்டி ஊராட்சி தலைவர் ஜெயப்பிரியா தலைமை வகித்தார். துணைத்தலைவர் சங்கீஸ்வரி முன்னிலை வகித்தார். பசுமைபதிலை அறக்கட்டளை தலைவர் மருதராஜன் வரவேற்று பேசினார். ஒருங்கிணைப்பாளர் பண்ணை கோமகன், துணைத்தலைவர் ராஜாமுகமது, பாலு, சாகுல்அமீது பங்கேற்று பேசினார். திருச்சி மகளிர் அரசு தோட்டக்கலை கல்லுாரி மாணவிகள் சங்கவி, சசிரா, சிந்துஜா, ஹைனி , சவுமியா, லட்சுமி ஜெகதீஸ் மூலிகை பண்ணையில் நடவு பயிற்சி மேற்கொண்டனர். பசுமை பதிலை கட்டளை செயலாளர் செல்வபாண்டி நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu