தேனி மாவட்டத்தில் பலத்த மழை: வைகையில் மீண்டும் நீர்வரத்து

தேனி மாவட்டத்தில் பலத்த மழை: வைகையில் மீண்டும் நீர்வரத்து
X

தேனி மாவட்டத்தில் பெய்த மழையால் வருஷநாடு  வைகை ஆற்றில் (மூல வைகை) நீர்வரத்து தொடங்கியுள்ளது.

தேனி மாவட்டத்தில் நேற்று பெய்த பலத்த மழையால் மூல வைகையில் நீர்வரத்து தொடங்கி உள்ளது.

தேனி மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாகவே மழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் பிற பகுதிகளில் லேசாக பெய்த மழை, மேகமலை, வருஷநாடு பகுதிகளில் அதிகமாக பெய்தது.

நேற்று இரவு தேனி மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது. இன்று காலை 6 மணி நிலவரப்படி ஆண்டிபட்டியில் 34.2 மி.மீ., அரண்மனைப்புதுாரில் 17.8 மி.மீ., போடியில் 25.2 மி.மீ., கூடலுாரில் 102.4 மி.மீ., மஞ்சளாறில் 51 மி.மீ., பெரியகுளத்தில் 35 மி.மீ., பெரியாறு அணையில் 24.2 மி.மீ., தேக்கடியில் 44.4 மி.மீ., சோத்துப்பாறையில் 28 மி.மீ., உத்தமபாளையத்தில் 29.6 மி.மீ., வைகை அணையில் 58.2 மி.மீ., வீரபாண்டியில் 30.4 மி.மீ., மழை பதிவானது.

கடும் வெயில் காரணமாக வாடி வதங்கிய மக்களுக்கு இந்த மழை மற்றும் மழையால் ஏற்பட்ட சில்லென்ற பருவநிலை மாற்றம் பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது. இந்த மழை காரணமாக ஒரு மாத இடைவெளிக்கு பின்னர் வைகை ஆற்றில் மீண்டும் நீர் வரத்து தொடங்கி உள்ளது. ஏற்கனவே வைகை அணை தொடர்ச்சியாக 8 மாதங்களாக நீர் நிரம்பி காணப்படும் நிலையில், இந்த மழையால் நீர் வரத்து தொடங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Tags

Next Story
ai based healthcare startups in india