கூடலுாரில் கொட்டுது மழை: ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு
![கூடலுாரில் கொட்டுது மழை: ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு கூடலுாரில் கொட்டுது மழை: ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு](https://www.nativenews.in/h-upload/2021/11/17/1403290-images-5.webp)
கூடலூரில் கன மழை பெய்கிறது.
தேனி மாவட்டம் கூடலுாரில் பலத்த மழை பெய்து வருவதால், நாளை மாலை நடைபெற இருந்த ஐந்து மாவட்ட விவசாயிகளின் ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என நிர்வாகிகள் தெரிவித்தனர்.
முல்லை பெரியாறு அணை பிரச்னையில் கேரள அரசின் அத்துமீறலை கண்டித்தும், கேரள அரசியல்வாதிகளின் விஷமத்தனங்களை கண்டித்தும், நாளை மாலை 4 மணிக்கு கூடலுாரில் பஸ்ஸ்டாண்ட் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று காலை முதல் தற்போது வரை கூடலுாரில் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. தவிர வானிலை ஆய்வு மையம் அடுத்த நான்கு நாட்களுக்கு ரெட் அலர்ட் கொடுத்துள்ளது. எனவே இந்த ஆர்ப்பாட்டத்தை வேறு வழியின்றி வரும் ஞாயிற்றுக்கிழமைக்கு ஒத்தி வைத்துள்ளதாக ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க துணைத்தலைவர் ஆர்.டி.ராஜீவ்காந்தி தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu