தேனி மாவட்டத்தில் பலத்த மழை: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தேனி மாவட்டத்தில் பலத்த மழை: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
X

பைல் படம்.

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையால் ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்து, அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

தேனி மாவட்டத்தில் தொடர்ச்சியாக நான்காவது நாளாக பலத்த மழை பெய்து வருகிறது. தேனி ஆண்டிபட்டியில் 33.2 மி.மீ., அரண்மனைப்புதுாரில் 6 மி.மீ., போடியில் 13.4 மி.மீ., கூடலுாரில் 32.4 மி.மீ., மஞ்சளாறில் 29.4 மி.மீ., பெரியகுளத்தில் 81 மி.மீ., பெரியாறு அணையில் 29.4 மி.மீ., தேக்கடியில் 54.6 மி.மீ., சோத்துப்பாறையில் 30 மி.மீ., உத்தமபாளையத்தில் 23 மி.மீ., வைகை அணையில் 26 மி.மீ., வீரபாண்டியில் 54 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.

இந்த மழையால் முல்லைப்பெரியாறு அணைக்கும் நீர் வரத்து விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடியை தாண்டி உள்ளது. இன்று மாலைக்குள் நீர் வரத்து விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடியை எட்டும் என தெரிகிறது. அணையில் இருந்து விநாடிக்கு 1600 கனஅடி நீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. அணை நீர் மட்டம் 134.15 அடியாக உள்ளது.

வைகை அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடியை எட்டி உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 69 கனஅடி நீர் மட்டுமே மதுரை குடிநீருக்கு திறக்கப்பட்டுள்ளது. நீர் மட்டம் 67.05 அடியாக உயர்ந்துள்ளது. அதேபோல் மஞ்சளாறு அணை, சண்முகாநதி அணை, சோத்துப்பாறை அணைகளுக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

Tags

Next Story