முல்லைப்பெரியாறு அணையில் பலத்த மழை: நீர் வரத்து அதிகரிப்பு

முல்லைப்பெரியாறு அணையில் பலத்த மழை: நீர் வரத்து அதிகரிப்பு
X

பைல் படம்.

கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், முல்லைப்பெரியாறு அணையில் பலத்த மழை பதிவாகி உள்ளது.

கேரளாவில் இடுக்கி மாவட்டம் உட்பட 11 மாவட்டங்களுக்க ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை 6 மணி நிலவரப்படி முல்லைப்பெரியாறு அணையில் 46 மி.மீ., மழை பதிவானது. தேக்கடியில் 28 மி.மீ., மழை பெய்தது. கம்பம், கூடலுார், உத்தமபாளையத்தில் தலா 4.8 மி.மீ., மழை பதிவானது. இந்த மழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 2150 கனஅடியை எட்டி உள்ளது. (இந்த அளவு இன்று இன்னும் அதிகரிக்கும்). அணையில் இருந்து விநாடிக்கு 1600 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் மட்டம் 128.40 அடியாக உயர்ந்துள்ளது. வைகை அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 1600 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 969 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை நீர் மட்டம் 55.32 அடியாக உயர்ந்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!