தேனி மாவட்டத்தில் பலத்த மழை- அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு
Latest Rain News- தேனி மாவட்டத்தில் கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களுக்கு பின்னர் மழை குறைந்தது. மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தாலும், தேனி மாவட்டத்தில் மழை கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று மாலை 3 மணிக்கு மேல் மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது. பெரியகுளத்தில் 82 மி.மீ., உத்தமபாளையத்தில் 55 மி.மீ., வைகை அணையில் 46.2 மி.மீ., வீரபாண்டியில் 55 மி.மீ., போடியில் 46 மி.மீ., கூடலுாரில் 18 மி.மீ., மழை பதிவானது.
இதேபோல் மாவட்டம் முழுவதும் மழை பெய்தது. இந்த மழையால் வைகை அணை நீர் வரத்து விநாடிக்கு 2500 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து மதுரை குடிநீருக்கு மட்டும் 69 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. முல்லைப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 1274 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 1800 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இதேபோல் மஞ்சளாறு அணை, சோத்துப்பாறை அணை, சண்முகாநதி அணைகளுக்கும் நீர் வரத்து தொடங்கி உள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu