தேனி மாவட்டத்தில் பலத்த மழை; ஆறுகள், அருவிகளில் குளிக்க தடை

தேனி மாவட்டத்தில் பலத்த மழை; ஆறுகள், அருவிகளில் குளிக்க தடை
X

தேனி மாவட்டம், மேகமலையில் பெய்யும் மழையால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Theni News Today-தேனி மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையால் ஆறுகள், அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Theni News Today-தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. தற்போதைய நிலையில் கூடலுார், கம்பம், மேகமலை பகுதிகளில் பலத்த மழையும், மற்ற பகுதிகளில் சற்று மிதமான மழையும் பெய்து வருகிறது. ஏற்கனவே மாவட்டம் முழுவதும் தென்மேற்கு பருவமழை பெய்து இருந்ததால், அத்தனை நீர் நிலைகளும் நிரம்பி இருந்தன. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை பெய்வதால் நீ்ர் வழிந்தோட தொடங்கி உள்ளது.

குறிப்பாக, தேனி மீறுசமுத்திரம் கண்மாய் உட்பட மாவட்டத்தின் பெரும்பாலான கண்மாய்கள் நிரம்பி விட்டன. மாவட்டத்தில் உள்ள அத்தனை அணைகளிலும் நீர் மட்டம் முழு அளவில் உள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவிகளிலும் நீர் வரத்து அதிகம் உள்ளது. இந்த ஆண்டு மழை வெள்ளத்தில் சிக்கிய பலர், உயிரிழந்து விட்டனர்.

எனவே உயிரிழப்புகளை தடுக்கும் வகையில், பலத்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள சுருளிஅருவி, சின்னசுருளி அருவி, கும்பக்கரை அருவி, போடி அணைக்கரைப்பட்டி தடுப்பணை போன்ற இடங்களில் மக்கள் குளிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் முல்லை பெரியாறு, சுருளிஆறு, வைகை ஆறு, கொட்டகுடி ஆறு, வராகநதி, மஞ்சளாறுகளில் நீர் வரத்து அதிகம் இருப்பதால் ஆறுகளிலும் மக்கள் குளிக்கவோ, மீன்பிடிக்கவோ முயற்சிக்க வேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெரியகுளம் கும்பக்கரையில் இருந்து கொடைக்கானல் செல்லும் அடுக்கம் சாலையில் மழையால் மண் சரிவு, நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இந்த பாதையை போக்குவரத்திற்கு பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்திய வனத்துறை, இப்பகுதியில் பயணிக்கவும் தடை விதித்துள்ளது.

அதேபோல் தேனி மாவட்டத்தையும், இடுக்கி மாவட்டத்தையும் இணைக்கும் கம்பம் மெட்டு ரோடு, போடி மெட்டு ரோடு, குமுளி ரோடுகளில் மண் சரிவும், பாறைகள் சரிவும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால், இரவு நேர பயணங்களை முடிந்த அளவு தவிர்த்து விடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ரோடுகள் முழுகண்காணிப்பில் உள்ளன என மாவட்ட நிர்வாகமும் எச்சரித்துள்ளது. ஆறுகளும், கண்மாய்களும் வருவாய்த்துறையினரின் கண்காணிப்பில் உள்ளன. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பொதுமக்கள் பாதிக்கப்பட்டால், அவர்களை மீட்க தேவையான அத்தனை ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என, மாவட்ட நிர்வாகமும் அறிவுறுத்தி உள்ளது.

மழை சேதம்

இதுவரை இந்தஆண்டு வெள்ளத்தில் சிக்கி ஏராளமானோர் பலியாகி உள்ளனர். இதனால் தான் ஆறுகள், கண்மாய்கள், அருவிகளில் யாரும் குளிக்க வேண்டாம் என தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை சின்னமனுார் அருகே உள்ள ஓடைப்பட்டி பேரூராட்சிக்கு அருகே வெள்ளையம்மாள்புரம் என்ற கிராமத்தில் விஜயராமன் என்பவருக்கு சொந்தமான தொழு மாடுகள் மேய்ச்சலுக்கு சென்றன. வெள்ளையம்மாள்புரம்- தென்பழனி ரோட்டில் இந்த மாடுகள் சென்ற போது, அந்த வழியக சென்ற மின்உயர்அழுத்தக்கம்பியின் மின்வயர்கள் அறுந்து விழுந்தன. இதில் மூன்று மாடுகள் மின்சாரம் தாக்கி அந்த இடத்திலேயே இறந்தன. இதனால் மின்வழித்தடங்களையும் முழுஅளவில் பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
Weight Loss Tips In Tamil