போடி மெட்டு பகுதியில் பலத்த மழை: புலியூத்து அருவியில் வெள்ளப்பெருக்கு

போடி மெட்டு பகுதியில்  பலத்த மழை:  புலியூத்து அருவியில் வெள்ளப்பெருக்கு
X

போடி மெட்டு மலையில் திடீரென பெய்த பலத்த மறையால் புலியூத்து அருவியில் வெள்ளப்பெருக்கு.ஏற்பட்டது.

போடி- மூணாறு இடையே ரோட்டில் சிறிய பாறைகள் விழுந்ததால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

போடி மெட்டு மலைப்பாதையில் நேற்று இரவு திடீரென கொட்டித் தீர்த்த கனமழையால் புலியூத்து அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

போடியில் இருந்து மூணாறு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று பலத்த மழை பெய்தது. இரவில் கொட்டித் தீர்த்த மழையால், புலியூத்து அருவியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் போடி- மூணாறு இடையே போக்குவரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. சிறிய பாறைகள் ரோட்டில் விழுந்தன. சிறிய அளவில் மண் சரிவு ஏற்பட்டது. ரோட்டில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு ரோட்டை சீரமைத்தனர். போக்குவரத்து சீராக 3 மணி நேரம் ஆனது.

Tags

Next Story
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: ஈரோட்டில் 170 பேர் கைது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல்