போடியில் அதிகாலையில் கொட்டி தீர்த்த மழை; திடீர் வெள்ளப்பெருக்கு

போடியில் அதிகாலையில் கொட்டி தீர்த்த மழை; திடீர் வெள்ளப்பெருக்கு
X

போடி பகுதியில் பெய்த பலத்த மழையால் அணைப்பிள்ளையார் அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

போடி பகுதியில் திடீரென இன்று காலை பெய்த பலத்த மழையால், அணைப்பிள்ளையார் அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

தேனி மாவட்டம், போடி மற்றும் குரங்கனி, போடி மெட்டு, கொழுக்கு மலை உள்ளிட்ட பகுதிகளில், இன்று அதிகாலை 2 மணி முதல், 5 மணி வரை திடீரென மழை கொட்டி தீர்த்தது. இந்த திடீர் மழையால் கொட்டகுடி ஆற்றில் எதிர்பார்க்காத வகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கொட்டகுடி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள போடி அணைப்பிள்ளையார் அணையிலும் வெள்ளம் அதிகளவில் வந்தது. இதனால் இன்று யாரும் அணைப்பிள்ளையார் அணையில் குளிக்க வேண்டாம் என போலீசாரும், தீயணைப்பு படையினரும் அறிவுறுத்தினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!