தேனி மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த மழையால் வீடு சேதம்: ஆறுகளில் வெள்ளம்

தேனி மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த மழையால் வீடு சேதம்: ஆறுகளில் வெள்ளம்
X

போடியில் பெய்த மழையால் வீடு இழந்த தம்பதி.

தேனி மாவட்டத்தில் இன்று பெய்த பலத்த மழையால் போடி, ஓடைப்பட்டியில் வீடுகள் இடிந்தன.

தேனி மாவட்டத்தில் இன்று அதிகாலை 3 மணிக்கு மேல் தொடங்கிய மழை, ஐந்து மணி வரை வெளுத்துக் கட்டியது. இந்த மழையால் ஓடைப்பட்டி, போடி உள்ளிட்ட பகுதிகளில் சில வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன. அதிர்ஷ்டவசமாக யாரும் உயிரிழக்கவில்லை. மழையை இழந்த ஒரு தம்பதியர் , அரசு தங்களுக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மழை சேத விவரங்கள் குறித்து வருவாய்த்துறை கணக்கெடுத்து வருகின்றனர்.

தேனி மாவட்டத்தில் மழையளவு: வீரபாண்டியில் 20.4 மி.மீ., உத்தமபாளையத்தில் 17.6 மி.மீ., அரண்மனைப்புதுாரில் 17.2 மி.மீ., பெரியகுளத்தில் 10 மி.மீ., தேக்கடியில் 24 மி.மீ., கூடலுார் மற்றும் போடியில் 8.6 மி.மீ., மழை பதிவானது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!