தேனி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை..!

தேனி மாவட்டத்தில்  கொட்டி தீர்த்த மழை..!
X

மழை -கோப்பு படம் 

தேனி மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக பலத்த மழை பெய்தது.

தேனி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று மாவட்டம் முழுவதும் பலத்த மழை பதிவானது. இன்று காலை 6 மணி நிலவரப்படி தேனி மாவட்டத்தில் பெய்த மழை வருமாறு(மி.மீ.,ல் கணக்கிடப்பட்டுள்ளது): ஆண்டிபட்டி- 33.6, அரண்மனைப்புதுார்- 30.6, வீரபாண்டி- 36.2, பெரியகுளம்- 50.2, மஞ்சளாறு- 24.2, சோத்துப்பாறை- 54.2, வைகை அணை- 23.2, போடி- 13.2, உத்தமபாளையம்- 15.2, கூடலுார்- 18.4, பெரியாறு அணை- 12, தேக்கடி- 14, சண்முகாநதி- 41.4 மி.மீ., மழை பதிவானது.

இந்த மழையால் பெரியகுளம் கும்பக்கரை அருவி, கம்பம் சுருளி அருவிகளிலும், போடி அணைக்கரைப்பட்டி தடுப்பணையிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வைகை ஆற்றில் விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடியும், முல்லை பெரியாற்றில் 1850 கனஅடியும் நீர் வரத்து உள்ளது. இன்று இரவுக்குள் நீர் வரத்தின் அளவு இன்னும் அதிகரிக்கும். எனவே அருவிகள், ஆறுகளில் யாரும் குளிக்க வேண்டாம் என பொதுமக்களை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்து வருவதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளிலும் நீர் மட்டம் உயரத்தொடங்கி உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil