சின்ன வெங்காயம், இயற்கை தந்த அற்புதம்..!

சின்ன வெங்காயம், இயற்கை தந்த அற்புதம்..!
X

சின்ன வெங்காயம்.

ஒரு கைப்பிடி சின்ன வெங்காயம் இருந்தாலே போதும்.. சின்ன சின்ன உடல்நலக் கோளாறுகளையும் அசால்ட்டாக தீர்க்கலாம். எப்படி தெரியுமா?

100 கிராம் சின்ன வெங்காயத்தில் நீர்ச்சத்து, புரதம், கார்போஹைடிரேட். கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்தும், வைட்டமின் "B", வைட்டமின் "C" கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து இப்படி அனைத்தும் அடங்கியிருக்கின்றன..

காரத்தன்மை: வெங்காயத்தின் காரத்தன்மைக்கு காரணம் "அலைல் புரோப்பைல் டை சல்பைடு" என்ற எண்ணெய் தான்.. வெங்காயம் உரிக்கும் போது, நமக்கு கண்ணீர் வருவதற்கு காரணமும் இந்த எண்ணெய் தான். உடலிலுள்ள கெட்ட நீரை வெளியேற்றக்கூடியது இந்த சின்ன வெங்காயம். ருசிக்காக மட்டுமல்லாமல், உடல் உபாதைகளுக்கும் இந்த சின்ன வெங்காயத்தை மருந்தாக பயன்படுத்தலாம்.. காலை, மதியம், மாலை, இரவு என்று 4 வேளைக்கு அரை ஸ்பூன் சின்ன வெங்காய சாறு சாப்பிட்டு வந்தால், நம்முடைய நுரையீரல் பலப்படுமாம்.. நுரையீரலில் தங்கியிருக்கும் அழுக்குகள், கழிவுகள், நச்சுக்கள் வெளியேறிவிடும்..

சுவாச கோளாறுகள்: ஜலதோஷம், இருமல், காய்ச்சல், நெஞ்சுசளி வந்தாலும், வெங்காய சாறுடன் சம அளவு தேன் கலந்து சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கிறது. இதயத்துக்கு மிகவும் நன்மை தரக்கூடியது சின்ன வெங்காயம். நெஞ்சுவலி பிரச்சினை இருப்பவர்கள் தினமும் வெங்காயத்தைப் பச்சையாக சாப்பிட்டு வந்தால் இதயம் பலம் பெறும். ரத்தம் உறையும் பிரச்சினையும் சீராகும்.

உடல் எடை குறைய வேண்டுமானாலும், சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டாலே நிறைய ஊட்டச்சத்து கிடைக்குமாம். காரணம், சின்ன வெங்காய சாறு கொழுப்பை கரைக்கும் தன்மையுடையது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தக்கூடியது. முக்கியமாக, புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் சின்ன வெங்காயத்தில் நிறையவே உள்ளன.

ரத்த சோகை: வெங்காயத்தில் வைட்டமின் E நிறைந்துள்ளதால், கண் சம்பந்தப்பட்ட கோளாறுகளை தடுக்கிறது. இரும்பு சத்து அதிகமுள்ள வெங்காயம், ரத்த சோகையை குணமாக்குகிறது.. மலச்சிக்கல் இருப்பவர்களும், வெங்காயத்தை நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும்.

உடலில் பித்தம் அதிகமாக சேர்ந்து விட்டால், 4 சின்ன வெங்காயத்தை தோலுரித்து, சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட்டால், பித்தம் நீங்கும். வாய் சுகாதாரம்: பல் வலி இருந்தாலும், வெங்காயத்தை ஒரு துண்டு எடுத்து பல்வலி உள்ள இடத்தில் வைத்தால் உடனே வலி குறையும்.. சொத்தைப் பல் உள்ள இடத்தில் வைத்தாலும், அந்த பல்லுக்குள் இருக்கும் புழுக்கள் வெளியேறி விடும்... பாக்டீரியாக்கள், தொற்றுக்களும் அழிந்து விடும்... சின்ன வெங்காயத்துடன், 2 புதினா இலைகளையும் சேர்த்து வாயில் போட்டு மென்று விழுங்கினால் இன்னும் நன்மை கிடைக்கும். வெங்காய நாற்றமும் வராது. வாய்ப்புண் குணமாகும்.

மூல நோயால் அவதிப்படுபவர்களுக்கு சின்ன வெங்காய சாறு பெரிதும் கை கொடுக்கிறதாம். அதாவது, 50 கிராம் வெங்காய சாற்றில் சிறிது தண்ணீர் சேர்த்து 15 நாட்களுக்கு குடித்து வந்தால் ரத்த மூலம் கட்டுக்குள் வருமாம். அல்லது வெங்காயத்தை துண்டுகளாக்கி, சிறிது இலவம் பிசின், சிறிது கற்கண்டு தூள் சேர்த்து பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் மூலக்கோளாறுகளும் நீங்குகிறதாம்.

வெங்காயம்: வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்பு தளர்ச்சி சீராகும்.. வெங்காயத்தில் இன்சுலின் நிறைய உள்ளதால் சர்க்கரை நோயாளிகள் இதை தாராளமாகவே பயன்படுத்தலாம். ஆண்களுக்கு வரப்பிரசாதம்தான் இந்த சின்ன வெங்காயம்.. குறிப்பாக, விறைப்பு தன்மை பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்தால், வெங்காயத்தை அப்படியே பச்சையாக சாப்பிடுவது நல்லதாம்.. காரணம், டெஸ்டோஸ்டிரோனின் அளவை அதிகரிக்க செய்வதாக ஆய்வுகள் கூறுகின்றன..

அதேபோல, வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட்டாலும் ஆண்களுக்கு நன்மை பயக்குவதாக சொல்கிறார்கள். 2 சின்ன வெங்காயத்தை இடித்து, அரை டம்ளர் தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் இதற்கு பலன் கிடைக்க வாய்ப்புள்ளது..

டாக்டர் ஆலோசனை: ஆனால், சின்ன வெங்காயத்தை இப்படியெல்லாம் மருந்தாக எடுக்கும் போது, மருத்துவர்களின் ஆலோசனையை கட்டாயம் பெற்றே சாப்பிட வேண்டும்.

வெங்காயத்தில் வைட்டமின் A,C,K நிரம்பியுள்ளதால் நம்முடைய சருமத்துக்கு போதுமான பாதுகாப்பை தருகின்றன.. புற ஊதா கதிர்களிலிருந்தும் பாதுகாக்கின்றன. அதனால்தான், முகத்தில் ஃபேஸ்பேக் போல வெங்காய சாற்றினை பயன்படுத்துவார்கள்.. ஆனால், முகப்பரு, காயங்கள், சிறு கட்டிகள் ஏதாவது இருந்தால், இந்த வெங்காய சாறு பூசக்கூடாது. ஆனால், நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.

கட்டிகள்: சருமத்தில், கட்டிகள் இருந்தாலும், இந்த சின்ன வெங்காயம் உதவுகிறது.. வெங்காயத்தை சுட்டு, சிறிது மஞ்சள், நெய் கலந்து இளஞ்சூட்டுடன் கட்டிகள் மீது வைத்து காட்டினால், நாளடைவில் கட்டிகள் பழுத்து உடையுமாம்..

அவ்வளவு ஏன்? அந்த காலத்தில் பாம்பு கடித்துவிட்டாலும் வெங்காயத்தையே மென்று தின்ன தருவார்களாம். இதனால் உடனே விஷம் இறங்குமாம்.. தேள்கொட்டிய இடத்தில், வெங்காயத்தை நசுக்கி தேய்த்தாலும், விஷம் இறங்கும் என்பார்கள்.

தலைமுடி: தலைவலி தீரவேண்டுமானால் அதற்கும் வெங்காயத்தை அரைத்து பற்று போடுவார்கள்.. தலைமுடி வளர்ச்சிக்கும் வெங்காயம் உதவுகிறது. தேங்காய் எண்ணெய் காய்ச்சும்போது, வெங்காய விழுதையும் கொட்டி காய்ச்சி வடிகட்டி பயன்படுத்தலாம்.. சின்ன வெங்காயத்தில் உள்ள சல்ஃபர் என்ற வேதிப்பொருள் இருப்பதால், தலைமுடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.. சின்ன வெங்காயச் சாற்றை தலையில் 5 நிமிடம் மசாஜ் செய்வதனால் ரத்த ஓட்டமும் அதிகரிக்கிறது.

Tags

Next Story
கடம்பூரில் வெடிபொருட்கள் பதுக்கிய 5 பேரை கைது செய்த போலீஸ்!