தொடர் விடுமுறையால் வனத்துறைக்கு தலைவலி

தொடர் விடுமுறையால் வனத்துறைக்கு தலைவலி
X

பைல் படம்.

தொடர் விடுமுறையால் தேனி மாவட்ட வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தேனி மாவட்டம் முழுக்க, முழுக்க மலைகளாலும், அடர்ந்த வனங்களாலும் சூழப்பட்ட மாவட்டம். தவிர இங்கு அணைகள், நீர் வீழ்ச்சிகள், அருவிகள், ஆறுகள் என அதிகம் உண்டு. இத்தனை இருந்தாலும், மக்கள் வனத்திற்குள் சென்று பொழுது போக்குவதையே வழக்கமாக கொண்டுள்ளனர். காரணம் மாவட்டத்தின் எந்த கிராமத்தில் இருந்தாலும் சில கி.மீ., பயணித்தால் வனத்திற்குள் சென்று விடலாம். சுமார் 3 லட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட வன நிலங்கள் தேனி மாவட்டத்தை சூழ்ந்துள்ளது.

இதற்குள் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. தவிர வனத்திற்குள் நீரோடைகள், சமநிலங்கள் என பல மாறுபட்ட அமைதியான, அருமையான சுற்றுச்சூழல் உள்ளது. தேனி மாவட்ட மக்களில் பலர், விடுமுறை என்றால் வனத்திற்குள் சென்று பொழுதுபோக்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். மக்கள் தானே குறிப்பிட்ட எல்லை வரை வந்து செல்லட்டும் என வனத்துறை மனிதாபிமான முறையில் அனுமதிக்கவும் முடியாது.

இருப்பினும் சில நேரங்களில் கண்டுகொள்ளாமல் இருந்தால், அந்த வாய்ப்பை வன வேட்டைக்காரர்கள் தவறாக பயன்படுத்தி வனத்திற்குள் புகுந்து வேட்டையாடுகின்றனர். இதனால் எதற்கு பிரச்னை என கருதி, தொடர் விடுமுறை வந்தால், ஒட்டுமொத்த வனத்துறையும் ரோந்து பணிகளில் இறங்கி விடுகின்றனர். தற்போது ஜனவரி 14ம் தேதி முதல் ஜனவரி 18ம் தேதி வரை தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால், வனக்குற்றங்களை தவிர்க்க வனத்துறையினர் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!