தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் தலைக்காய சிகிச்சை பிரிவு தொடங்கப்படுமா?

தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில்  தலைக்காய சிகிச்சை பிரிவு தொடங்கப்படுமா?
X

பைல் படம்

தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவம னையில் தலைக்காய சிகிச்சை பிரிவு தொடங் கப்பட வேண்டும்.

தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை தொடங்கப்பட்டு 18 ஆண்டுகளை கடந்த பின்னரும் முழு அளவில் செயல்படும் தலைக்காய சிகிச்சை பிரிவு வசதி இல்லாததால், விபத்தில் சிக்கிய மக்களை பாதுகாப்பதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது.

தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை தொடங்கப்பட்டு 18 ஆண்டுகளுக்கும் மேல் ஆகி விட்டது. இங்கு மருத்துவ உயர்கல்வி படிக்கும் வசதிகளும் உள்ளன. கல்லுாரி மருததுவமனையில் அதிகளவு விரிவாக்க வசதிகள் செய்யப்பட் டுள்ளது. எலும்பு, நரம்பு, சிறுநீரகம், புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பிரிவுகளுக்கும் மருத்துவர்கள் உள்ளனர். பிரவச வசதிகள் அதிகளவில் உள்ளன. இப்படி பல்வேறு சிறப்பு வசதிகள் இருந்தாலும், தலைக்காய சிகிச்சை பிரிவு வசதிகள் இன்னமும் முழுமையாக செயல்படவில்லை.

எலும்பு முறிவுக்கு மட்டுமே சிகிச்சைகள் உள்ளன. மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டியில் இருந்து தேனி மாவட்ட எல்லை வரை வசிக்கும் கிராம மக்கள், தேனி மாவட்டத்தை ஒட்டிய திண்டுக்கல் மாவட்ட மக்கள், இடுக்கி மாவட்ட மக்கள் விபத்தில் சிக்கினால் அவர்கள் தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு தான் ஓடோடி வருகின்றனர்.

அப்படி வரும் போது, இங்கு முதலுதவிகள் மட்டும் செய்யப்பட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படும் நிலை காணப்படுகிறது. இதற்குள் பலர் உயிரிழந்து விடுகின்றனர். அப்படியே மதுரையில் சேர்த்தாலும், தென் மாவட்டங்கள் முழுவதும் விபத்தில் சிக்கியவர்கள் சிகிச்சைக்கு குவிவதால் மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை திணறுகிறது.

இது போன்ற சிரமங்களை தவிர்க்க, அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் நிறைந்த தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் தலைக்காய சிகிச்சை பிரிவு வசதிகளை முழுமையாக செயல்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Next Story