மக்கு மாணவன் கலெக்டர் ஆனது எப்படி சுவாரஸ்ய தகவல்
குஜராத் மாநிலம் பாரூச் மாவட்ட கலெக்டர் துஷார் அவர் பத்தாம் வகுப்பில் வாங்கிய மதிப்பெண் பட்டியல்.
தமிழகத்தில் வரும் இருபதாம் தேதி பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ வகுப்புகளுக்கான ரிசல்ட் மற்றும் மதிப்பெண் பட்டியல் வெளியாக உள்ளது. குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் தன்னம்பிக்கை இழந்து விடக்கூடாது. முயற்சி மட்டும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை உணர்த்தவே இந்த பதிவு வெளியிடப்படுகிறது.
பத்தாம் வகுப்பில் கணக்கில் நூற்றுக்கு 36, ஆங்கிலத்தில் 35, அறிவியல் பாடத்தில் 38 மதிப்பெண்கள் எடுத்தவர், இப்போது ஒரு மாவட்டத்துக்கே கலெக்டர் என்றால் நம்ப முடியுமா? முடியும் என்று சாதித்து காட்டி இருக்கிறார் துஷார் சுமேரா. குஜராத்தில் உள்ள கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்; பத்தாம் வகுப்பில் இவ்வளவு குறைந்த மதிப்பெண்களை பெற்ற போதும், தளராமல் படித்து, ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இப்போது, குஜராத்தில் உள்ள பாரூச் மாவட்டத்தின் கலெக்டராக இருக்கிறார். இவர் 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் பட்டியலை சக ஐஏஎஸ் அதிகாரியான அவனிஷ் சரண் தனது டிவிட்டர் பதிவில் வெளியிட்டு இருக்கிறார். இதை கண்ட நெட்டிசன்கள், துஷாரை புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கின்றனர். இந்த பதிவு வெளியான சில மணி நேரத்தில் பல லட்சம் லைக்குகளை அள்ளி இருக்கிறது.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu