தி.மு.க.,வில் கோஷ்டிகளை ஒழித்து விட்டாரா ஸ்டாலின்?

பைல் படம்
DMK News Tamil -தி.மு.க. வில் உள்கட்சி தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. ஜெ. இருந்த போது அ.தி.மு.க.-வில் எப்படி உள்கட்சி தேர்தலை நடத்தினாரோ அதே பாணியில் முதல்வர் ஸ்டாலினும் நடத்தி உள்ளார். அதாவது கட்சித்தலைவர் பதவியில் இருந்து சாதாரண கிராம வார்டு பதவி வரை போட்டியிடுபவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட பெரும்பாலான இடங்களில் இதேதான் நடந்துள்ளது.
இப்படித்தான் ஜெ., நிர்வாகிகளை அறிவிப்பார். அதாவது போட்டியிட விரும்பும் அத்தனை பேரிடமும் மனுக்களை பெற்று, அதில் ஒருவரை நியமித்து அறிவிப்பது ஜெ. வழக்கம். இதே பாணியினை தான் தற்போது முதல்வர் ஸ்டாலினும் கடைபிடித்துள்ளார். இதில் என்ன பலன் என்றால், ஓட்டுப்பதிவு மூலம் கட்சி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டால், மூன்று அல்லது நான்கு பேர் ஒவ்வொரு பதவிக்கும் களம் இறங்குவார்கள். ஓட்டுப்போட கட்சி உறுப்பினர்களை அழைத்து வருவார்கள். அப்போது கட்சி உறுப்பினர்களிடையே கோஷ்டி பிரிவினை -மோதல் ஏற்படும். அது தவிர்க்கப்பட்டுவிட்டது என்றே சொல்லலாம்
வாக்களிக்கும் முறையால் படிப்படியாக வளர்ந்து உள் கட்சியிலேயே ஒருவருக்கு மற்றவர் எதிரி என்ற நிலையை உருவாகும். இந்த நிலைப்பாடு பொதுத் தேர்தலிலும் கடுமையாக எதிரொலிக்கும். இப்படி பல முறை உள்கட்சி மோதலில் கோஷ்டிகள் உருவாகி தி.மு.க. பல்வேறு சிக்கல்களை அனுபவித்துள்ளது. ஆனால் போட்டியிடுபவர்களில் ஒருவர் நியமன முறையில் அறிவிக்கப்பட்டால், அவர் மேலிடத்திற்கு வேண்டியவர், அவரை நாம் அனுசரித்து போய் விடுவோம் என்ற முடிவுக்கு போட்டியாளர்கள் வந்து விடுகின்றனர்.
தவிர நியமிக்கப்பட்டவரும், தனது பதவிக்கு போட்டியாக மனு கொடுத்தவர்களை அனுசரித்து செல்ல வேண்டும். போட்டியில் தான் நீங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளீர்கள். ஓட்டுப்பதிவில் தேர்வு செய்யப்படவில்லை. எனவே எதிர்ப்பு அரசியலை கை விட்டு, உள்கட்சியில் அனுசரித்து போகும் அரசியல் முறைக்கு வாருங்கள் என மேலிடம் அறிவுறுத்தி உள்ளது.
நியமிக்கப்பட்டவரும், நாம் இம்முறை அனுசரித்து செல்லாவிட்டால், அடுத்த வாய்ப்பு வராது என சற்று அடக்கியே வாசிப்பார். இதன் மூலம் உள்கட்சி குழப்பங்கள் குறையும். எனவே தான் ஜெ. இந்த பாணியினை பின்பற்றி நடத்தினார். இம்முறை நடைபெற்று முடிந்த கட்சி தேர்தலில் தி.மு.க.வில் அத்தனை பதவிகளும் இதே பாணியில் நியமிக்கப்பட்டு விட்டதால், கோஷ்டிகளே இல்லாமல் போய் விட்டது என்று கூற முடியாது. ஆனால் நியமன நிர்வாகிகளை அத்தனை பேரும் ஏற்றுக் கொள்ளும் முடிவுக்கு வந்து விட்டனர். இதனால் ஓரிரு இடங்களை தவிர மற்ற இடங்களில் கோஷ்டி பூசல் முடிவுக்கு வந்து விட்டது. இது முதல்வர் ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி என தி.மு.க.வினரே பகிரங்கமாக கூறி வருகின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu