மாணவிகளுக்கு ஏற்படும் தொல்லைகள் குறித்து தெரிவிக்க புகார் பெட்டி
தேனி என்.எஸ். பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் முரளீதன் புகார் பெட்டியை வைத்தார்.
Complaint Box- தேனி நாடார் சரஸ்வதி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட நிர்வாகம், நீதித்துறை, மாவட்ட போலீஸ் நிர்வாகம் இணைந்து புகார் பெட்டி வைத்தனர். இந்நிகழ்விற்கு மாவட்ட கலெக்டர் முரளீதரன் தலைமை வகித்தார். எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரே, தலைமை நீதித்துறை நடுவர் கோபிநாதன், மாவட்ட சட்டப்பணிகள் குழு செயலாளர் ராஜ்மோகன், முதன்மைக்கல்வி அலுவலர் செந்திவேல்முருகன் புகார் பெட்டியை பள்ளியில் வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை தலைவர் ராஜ்மோகன் அண்ணாச்சி, செயலாளர் ஆனந்தவேல், டி.எஸ்.பி., பால்சுதர், குற்றப்பிரிவு ஏ.டி.எஸ்.பி., கார்த்திக் பங்கேற்றனர். மாவட்ட சட்டப்பணிகள் குழு செயலாளர் பேசும்போது இந்த புகார் பெட்டியின் சாவி நீதித்துறையிடம் இருக்கும். எனவே மாணவிகள் தாராளமாக தங்கள் புகார்களை எழுதி போடலாம். இந்த புகார்கள் சம்மந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு முறையாக விசாரிக்கப்படும். புகார் மீதான நடவடிக்கையினை நீதித்துறையே எடுக்கும். பள்ளியில் மட்டுமல்ல. பஸ்கள், பொது இடங்களில் நடக்கும் சம்பவங்கள் குறித்தும் மாணவிகள் புகார் அளிக்கலாம் என்றார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu