மதுக்குடிப்பவர்களால் தொல்லை: முதல்வரிடம் மாணவர்கள் புகார்

மதுக்குடிப்பவர்களால் தொல்லை: முதல்வரிடம் மாணவர்கள் புகார்
X
குடிமகன்களின் தொல்லையில் இருந்து விடுவிக்குமாறு பள்ளி மாணவர்கள் தமிழக முதல்வருக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர்

கம்பத்தில் பள்ளி அருகே டாஸ்மாக் கடை உள்ளதால், குடிமகன் தொல்லை அதிகரித்து வருகிறது என மாணவர்கள் தமிழக முதல்வரிடம் புகார் கூறியுள்ளனர்.

கம்பம் ஆங்கூர்பாளையம் ரோட்டில் தனியார் பள்ளி உள்ளது. முக்கிய போக்குவரத்து ரோடான இங்கு நெருக்கமான குடியிருப்புகளும், முக்கிய வணிக நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் உள்ளன. இங்கு டாஸ்மாக் கடையும் உள்ளது. குடிமகன்கள் அடிக்கும் கொட்டத்தால், பள்ளி மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இதனால் மாணவர்கள் பல நுாறு பேர் ஒரே நேரத்தில் தமிழக முதல்வருக்கும், தேனி கலெக்டருக்கும் அஞ்சல் அட்டையில் புகார் அனுப்பி உள்ளனர். இந்த புகாரில், 'டாஸ்மாக் கடைக்கு வரும் குடிமகன்களின் தொல்லையால் தாங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த கடையினை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்' எனவும் குறிப்பிட்டுள்ளனர்

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings