தேனியில் இதுவரை இல்லாத அளவுக்கு நிலத்தடி நீர் மட்டம் உயர்வு

தேனியில் இதுவரை இல்லாத அளவுக்கு நிலத்தடி நீர் மட்டம்  உயர்வு
X

பைல் படம்

தேனி மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்துள்ளது.

20 ஆண்டுகளுக்கு பின்னர் 40 அடி தேண்டினாலே நிலத்தடி நீர் அதிகளவில் கிடைக்கிறது.

தேனி மாவட்டத்தில் பல ஆண்டுகளாக மழைப்பொழிவு மிகவும் குறைந்தது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து பல ஒன்றியங்கள் கருமை ஒன்றியங்களாக அறிவிக்கப்பட்டன. தேனி, சின்னமனுார், பெரியகுளம், ஆண்டிபட்டி ஒன்றியங்களில் சுமார் 500 அடிக்கும் கீழ் நிலத்தடி நீர் மட்டம் சரிந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை, தென்கிழக்கு பருவமழை மிகவும் நல்ல முறையில் பெய்தது. கடந்த ஆண்டு தொடர்ச்சியாக நான்கு மாதங்கள் மழை கிடைத்ததால் நிலத்தடி நீர் கிடைத்தது.

குறிப்பாக இந்த ஆண்டும் பலத்த மழை இல்லாவிட்டாலும், தொடர்ச்சியாக சுமாரான மழை நீண்ட நேரம் பெய்து கொண்டே இருந்தது. இப்படி மழை தொடர்ச்சியாக பெய்ததாலும் மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் நிலத்திற்குள் மழை நீர் சென்றது. வெள்ளமாக பெருக்கெடுத்து ஒடி வீணாகவில்லை.

கண்மாய்கள், ஏரிகள், குளங்களில் சிறிது, சிறிதாக தண்ணீர் தேங்கியது. எங்குமே வெள்ளம் பெருக்கெடுத்து செல்லவில்லை. இது போன்ற சாதகமான சூழ்நிலை காரணமாக நிலத்திற்குள் தண்ணீர் இங்கி நீர் மட்டம் நல்ல முறையில் உயர்ந்துள்ளது. மிகவும் பாதிக்கப்பட்ட கருமை பகுதிகளான சின்னமனுார், ஆண்டிபட்டி, தேனியில் கூட தற்போது 40 அடி ஆழத்திலேயே நிலத்தடி நீர் மட்டம் காணப்படுகிறது.

இந்த சூழ்நிலையை பயன்படுத்தி, கிடைக்கும் மழை நீரை நன்கு சேமித்து பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக பொதுப்பணித்துறை நீர் வள ஆதாரப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil