பழைய முறையில் சம்பள பட்டியல்: அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

பழைய முறையில் சம்பள பட்டியல்: அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்
X

பைல் படம்

IFHRMS Meaning in Tamil-பழைய முறையில் சம்பள பட்டியல் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

IFHRMS Meaning in Tamil-தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.தமிழ்ச்செல்வி மற்றும் பொதுச் செயலாளர் ஜெ.லட்சுமி நாராயணன் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாடு அரசு கடந்த ஆட்சி காலத்தில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மையை ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் பொருட்டு அனைத்து அரசு அலுவலகங்களிலும் IFHRMS என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்தியது. IFHRMS திட்டத்தின் படி, காலையில் பட்டியல் மாலையில் பணம் என்ற அடிப்படையில் அப்போதைய கருவூலக் கணக்குத் துறை ஆணையாளரால் பிரசாரம் செய்யப்பட்டது.

ஆனால், இந்த மார்ச் மாதத்தில் IFHRMS Server திறன் குறைபாடு காரணமாக கருவூலத்துறை வரலாற்றிலேயே ஏப்ரல் மூன்றாம் தேதி கொடுக்க வேண்டிய இம்மாத ஓய்வூதியம் மார்ச் 12ஆம் தேதியே அவசர அவசரமாக வங்கிக்கு அனுப்பிட ஆணையிடப்பட்டது. அதேபோல் மார்ச் மாத ஊதிய பட்டியலுக்கான Payroll icon மார்ச் 19ஆம் தேதியே முடிக்கப்பட்டதால் தற்காலிக பணியிடங்களுக்கான Pay Authorisation கிடைக்கப்பெறாத பணியிடங்களுக்கு பட்டியல் சமர்ப்பிப்பதில் மிகப்பெரிய சிரமங்கள் ஏற்பட்டுள்ளது.

இது போன்று மாற்று ஏற்பாடுகள் பல செய்தும், மண்டல வாரியாக 2 மணி நேரம் மட்டுமே ஒதுக்கப்பட்டும் கூட, ஒதுக்கப்பட்ட நேரத்தில் பாதிக்கும் மேற்பட்ட நேரம் IFHRMS செயலி செயல்படவில்லை. இந்த நிதியாண்டின் இறுதி மாதமான இம்மாதத்தில் பல அலுவலகங்களில் திருத்திய மதிப்பீடு மற்றும் FMA வில் நிதி ஒதுக்கீடு தற்பொழுது தான் பெறப்பட்டுள்ளது. IFHRMS செயலி மார்ச் மாதம் தொடக்கம் முதல் சரியாக செயல்படாததால் பட்டியல்களை கருவூலத்தில் சமர்ப்பிக்க இரவு பகல் பாராமல் ஊழியர்கள் உழைத்து வருகின்றனர். மேலும் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் கொடுக்கும் அழுத்தத்தின் காரணமாக அனைத்து ஊழியர்களும் மிகுந்த மன உளைச்சலுடன் பணியாற்றி வருகின்றனர்.

IFHRMS குறைபாடுகள் தொடர்பாக கருவூலத் துறை நிர்வாகமோ இத்திட்டத்தை செயல்படுத்தும் WIPRO நிறுவனமோ இது தொடர்பாக எந்த ஒரு சரியான பதிலும் தருவதில்லை. இந்தக் குளறுபடிகள் அனைத்திற்கும் காரணம் IFHRMS server திறனை மேம்படுத்தாமல் உள்ளதே ஆகும். ஆனால், இது தொடர்பாக எந்த ஒரு ஏற்பாடுகளும் செய்யாமல் கருவூலக் கணக்குத் துறை நிர்வாகம் பட்டியல்களை உடனடியாக கொண்டுவர காலக்கெடு விதித்து சுற்றறிக்கை அனுப்பி உள்ளது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் உள்ளது.

அதேபோல் கருவூலத்துறை நிர்வாகம் அதன் ஊழியர்களை server செயல்படாவிட்டாலும் பட்டியல்களை உடனடியாக தயார் செய்ய வேண்டும் என்பது கொடுமையின் உச்சம். எனவே, IFHRMS server திறனை மேம்படுத்தும் வரையும் அதில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளைக் களையும் வரையிலும் IFHRMS திட்டத்தை ரத்து செய்து பழைய முறையில் பட்டியல்களை பெற வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு கூறியுள்ளனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!