திறன் வாய்ந்த விவசாயிகளுக்கு தமிழக அரசு பல லட்சம் பரிசு

திறன் வாய்ந்த விவசாயிகளுக்கு தமிழக அரசு பல லட்சம் பரிசு
X
மாநிலம் முழுவதும் திறன் வாய்ந்த விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பல லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.

மாநில அளவில் புதிய வேளாண் தொழில்நுட்பத்தை கண்டறிந்த விவசாயிக்கு ஒரு லட்சம் ரூபாயும், சிறந்த வேளாண் கருவி கண்டறிந்த விவசாயிக்கு 2 லட்சம் ரூபாயும், சிறந்த அங்கக விவசாயிக்கு ஒரு லட்சம் ரூபாயும் வழங்கப்பட உள்ளது. அங்கக விவசாயிக்கு இரண்டாம் பரிசாக 60 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசாக 40 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. சிறந்த விவசாய பொருள் ஏற்றுமதியாளர்களுக்கு 2 லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. பரிசு பெற தகுதியுள்ள விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் 100 ரூபாய் கட்டணம் செலுத்தி, ரசீது பெற்று விண்ணப்பங்களை இணைத்து வேளாண் இணை இயக்குனர், தோட்டக்கலை துணை இயக்குனர், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை அலுவலகத்தில் வரும் மார்ச் 21ம் தேதிக்குள் நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும்.

Tags

Next Story
why is ai important to the future