தேனி பகுதி அரசு பள்ளி மாணவ, மாணவிகள் 10 பேர் மாநில செஸ் போட்டிக்கு தகுதி

தேனியில் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற செஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும், பதக்கமும், பாராட்டு சான்றும் வழங்கப்பட்டது.
Chess Competition News Tamil -தேனி கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமி கடந்த 2007 -ம் ஆண்டு சிறு அளவில் தொடங்கப்பட்டது. பின்பு 2009 -ம் ஆண்டு முதல் தனி பயிற்சி பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளாக 38 மாவட்ட போட்டிகளையும், 4 மாநில போட்டிகளையும் இப்பள்ளி நடத்தி உள்ளது. இதுவரை இப்பள்ளி 2000ம் மாணவர்களுக்கு மேல் பயிற்சி கொடுத்துள்ளது.
இதில் பல மாணவர்களை மாநில அளவிலும், தேசிய அளவிலும் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்த செஸ் அகாடமி பல அரசு, மற்றும் தனியார் பள்ளிகளுக்கு சிறப்பு செஸ் பயிற்சி அளித்து வருகிறது. தற்பொழுது தேனி அன்னப்பராஜா மண்டபம் எதிரே உள்ள கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளி நடத்திய போட்டிகளில் மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், முக்கிய அரசியல் பிரமுகர்கள், ரோட்டரி, லயன்ஸ் கிளப் பிரமுகர்கள் தேனி மாவட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்று பாராட்டி யுள்ளனர். தற்போது இதன் தலைவராக சையது மைதீன், செயலாளராக மாடசாமி, பொருளாராக கணேஷ்குமார் துணைத்தலைவராக நவீன், இணைச்செயலாளராக அக்மல்கான் மற்றும் சீனிவாசன், ராஜ்குமார், .அமானுல்லா ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர்.
தேனி கிராண்ட்மாஸ்டர் செஸ் அகாடமியும், தேனி சென்ட்ரல் ஜெம்ஸ் ரோட்டரி சங்கமும் இணைந்து கிராமப்புற மாணவர்களுக்கும் சதுரங்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தேனி தே. லட்சுமிபுரம் அரசு துவக்கப்பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சிறப்பு சதுரங்கப் போட்டிகள் நடத்தினர். தேனி வட்டாரக் கல்வி அலுவலர் ஹெலன் மெடில்டா தலைமை வகித்தார். தேனி சென்ட்ரல் ஜெம்ஸ் ரோட்டரி சங்கத் தலைவர் முருகானந்தம், செயலாளர் முத்துராமன் , பள்ளி தலைமை ஆசிரியர் முருகலட்சுமி முன்னிலை வகித்தனர்.
வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு தேனி சென்ட்ரல் ஜெம்ஸ் ரோட்டரி பட்டயத் தலைவர் ஜெயமணி , மற்றும் நிர்வாகிகள் சண்முகவேல், பிரபானந்த லிங்கம் பரிசுகள், பதக்கம், சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்தினார். ஆசிரியர் மாரிதங்கம் வரவேற்றார். போட்டிகளை தமிழ் நாடு மாநில சதுரங்க கழக நடுவரும் தேனி கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமியின் தலைவருமான சையது மைதீன் நடத்தினார், துணை நடுவராக அஜ்மல்கான் செயல்பட்டார்.
பள்ளி கிராமக்கல்விக்குழுவினர், பள்ளி மேலாண்மை குழுவினர், சிறப்பு பயிற்றுனர் முத்துபாண்டி, இல்லம் தேடிக்கல்வி சிறப்பு ஆசிரியர் S வெற்றிவேல்செழியன், உட்பட பலர் கலந்து கொண்டனர், மேலும் சிறப்பு நிகழ்வாக உலக மாற்றுத் திறனாளிகள் தினமான டிசம்பர் - 3-ஐ முன்னிட்டு மாற்றுதிறன் மாணவர்களுடன் சக மாணவர்கள் நட்புணர்வை ஏற்கும் உறுதிமொழி எடுத்தனர். இந்த உறுதி மொழி ஏற்பு நிகழ்வில் மாணவர்கள் அனைவரும் பங்கேற்றனர்.
போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்கள் விவரம்: 8 - வயது பிரிவில் லோகேஷ் சக்தி , பிரஜித், யோக ஸ்ரீ, யோகனாஸ்ரீ, பத்திரிநாத் ஆகியோர் முறையே முதல் ஐந்து இடங்களையும் 10- வயது பிரிவில் கவின் கண்ணா, நிஜித்தா ஸ்ரீ, அகிலேஸ்கண்ணன், ரித்திஷ், நவின் ஆகியோர் முறையே முதல் ஐந்து இடங்களிலும் வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்கள் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள மாநில போட்டியில் பங்கேற்கேத்தகுதி பெற்றனர். இவர்களை போட்டிக்கு அழைத்துச் செல்லும் பணியினை தேனி மாவட்ட செஸ் அகாடமியினரும், ஆர்வலர்களும் மேற்கொண்டு வருகின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu