தனியார் பஸ் நிறுவனங்களுக்கு உதவிபுரியும் அரசு அதிகாரிகள் ?

தனியார் பஸ் நிறுவனங்களுக்கு உதவிபுரியும் அரசு அதிகாரிகள் ?
X

பைல் படம்

அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் மறைமுகமாக தனியார் பஸ் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்.

அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு ஆண்டு தோறும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய பஸ்கள் வாங்கப்பட்டாலும், தனியார் பஸ் புறப்படும் நேரத்திற்கு முன்பும், பின்பும் ஓட்டை உடைசல் பஸ்களுக்கு நேரம் ஒதுக்கி போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தனியார் பஸ்களுக்கு மறைமுகமாக உதவி வருகின்றனர் என்று தொழிற்சங்கத்தினர் புகார் எழுப்பி உள்ளனர்.

இது குறித்து தேனி மாவட்ட போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் கூறியதாவது: அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு ஆண்டு தோறும் சராசரியாக 2 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்கப்படுகின்றன. ஆனால் ஒரு ஊரில் இருந்து தனியார் பஸ் புறப்படும் நேரத்திற்கு முன்பும், பின்பும் இந்த புதிய அரசு பஸ்கள் இயக்கப்படுவதில்லை. மிகவும் அரதபழசான ஓட்டை உடைசல் அரசு பஸ்கள் தனியார் பஸ் புறப்படும் நேரத்திற்கு முன்பும், பின்பும் இயக்கப்படுகின்றன. இதனால் மக்கள் தனியார் பஸ்களில் ஏறுகின்றனர் தவிர மக்களுக்கு சேவை செய்யும் அரசுத்துறை பஸ்களில் டிக்கெட் கட்டணம் அதிகமாக உள்ளது. தனியார் பஸ்களில் டிக்கெட் கட்டணம் குறைவாக உள்ளது.

தனியார் பஸ்களும் சுத்தமாக பளீச் என உள்ளன, டிக்கெட் கட்டணமும் குறைவு, குறிப்பிட்ட நேரத்திற்கும் சென்று மற்ற ஊர்களுக்கு சேர்கிறது. இதனால் மக்கள் தனியார் பஸ்களில் ஏறி பயணிக்க போட்டி போடுகின்றனர். மக்களை இப்படி தனியார் பஸ்களை நோக்கி திருப்பவே அந்த பஸ் புறப்படும் நேரத்திற்கு முன்பும், பின்பும் அரசின் ஓட்டை உடைசல் பஸ்கள் நிற்கும். இந்த பஸ்களில் சீட்களும் சரியாக இருக்காது. வேகமாகவும் செல்லாது. பராமரிப்பும் மோசமாக இருக்கும். பஸ்களும் அழுக்கடைந்து காணப்படும். டிக்கெட் கட்டணமும் அதிகம். பஸ்களை இப்படி மோசமாக பராமரிப்பதன் மூலம் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தனியார் பஸ்களுக்கு மறைமுகமாக உதவுகின்றனர். இதற்கென தனியார் பஸ்களிடம் இருந்து அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் சன்மானம் பெறுவதாக பல தொழிற்சங்கங்கள் புகார்கள் எழுப்பி உள்ளன.

குறிப்பாக பல அரசு போக்குவரத்து பணிமனைகளில் பஸ்களுக்கு தேவையான உதிரி பாகங்கள் எதுவும் இல்லை. தேனியில் இருந்து நீண்ட துாரம் கோயில் நகருக்கு பயணிக்கும் ஒரு பஸ் டிரைவர் தனது பஸ் இடையில் பழுதானால் தேவைப்படும் பாகங்களை அவர் சொந்தமாக பணம் போட்டு வாங்கி தயார் நிலையில் வைத்திருக்கிறார். அவர் பஸ் பணிமனைக்கு வரும் போது, அவரிடம் உபகரணங்களை ஓசி வாங்கி இங்குள்ள மெக்கானிக்குகள் பயன்படுத்துகின்றனர். அரசு போக்குவரத்துக்கழக நிர்வாகம் இப்படி உள்ளது. கடந்த 2018 ஏப்ரலுக்கு பின்னர் ஓய்வு பெற்ற பஸ் ஊழியர்களுக்கு இதுவரை பணப்பலன்கள் வழங்கப்படவில்லை. இவ்வாறு கூறினர். இது குறித்து அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகளிடம் கருத்து கேட்க தொடர்பு கொண்ட போது, தொடர்பு கொள்ள மறுத்து விட்டனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி