ரேஷன் கோதுமை, பாமாயில் கை விரித்து விட்டதா அரசு?

பைல் படம்.
Ration Shop Latest News - ரேஷனில் கோதுமை குறைவாகவே வழங்கப்பட்டாலும், அதனை வாங்கி பக்குவப்படுத்தி சாப்பிடவும் பலர் விரும்புகின்றனர். இருப்பினும் சில மாதங்களாக ரேஷனில் கோதுமை விநியோகம் செய்யப்படவில்லை. இனிமேல் கோதுமை வர வாய்ப்புகள் குறைவு என ரேஷன் ஊழியர்களே மக்களிடம் கூறி வருகின்றனர். இந்த மாதம் இதுவரை பெரும்பாலான கடைகளுக்கு பாமாயிலும் வரவில்லை என ரேஷன் ஊழியர்கள் கூறி வருகின்றனர். ரேஷனின் ஒரு லிட்டர் பாமாயில் விலை 25 ரூபாய் மட்டுமே. ஆனால் வெளி மார்க்கெட்டில் இதன் விலை ஐந்து மடங்கு அதிகம். எனவே நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பாமாயிலை விரும்புகின்றனர். ஆனால் பாமாயில் இதுவரை ரேஷனில் கிடைக்கவில்லை. அரசு தட்டுப்பாடு இன்றி பாமாயில் வழங்க வேண்டும். கோதுமை விநியோகமும் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu