அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒருவர் பலி; 47 பேர் படுகாயம்

அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒருவர் பலி; 47 பேர் படுகாயம்
X

பைல் படம்.

ஆண்டிபட்டி கணவாய் மலைப்பாதையில் அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் டிரைவர் உயிரிழந்தார்.

திருச்செந்துாரில் இருந்து குமுளி சென்ற அரசு பஸ்சும், குமுளியில் இருந்து நாகர்கோயில் சென்ற அரசு பஸ்சும் ஆண்டிபட்டி கணவாய் மலைப்பாதையில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இதில் திருச்செந்துாரில் இருந்து குமுளி வந்த அரசு பஸ் டிரைவர் ரத்தினசாமி, 50 சம்பவ இடத்திலேயே பலியானார். 47 பேர் பலத்த காயமடைந்தனர். ஆண்டிபட்டி தீயணைப்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

காயமடைந்தவர்கள் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஆண்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!