ஆண்டிப்பட்டியில் 2 கஞ்சா வியாபாரிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கடமலைக்குண்டு அருகே உள்ள பாலூத்து என்ற கிராமத்தில் சேர்மலையாண்டி கோயில் அருகே போலீசார் வாகன சோதனை நடத்தினர். அந்த வழியாக ஆட்டோவில் கஞ்சா கடத்தி வந்த ஜெயபால்(வயது 55,) அவரது மகள் சத்யா(வயது 39,) மகன் ஜெயசூர்யா,( 28,) ஆட்டோ டிரைவர் சுந்தரபாண்டி,( 28 )ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 8 கிலோ கஞ்சா 40 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான நான்கு பேரில் ஜெயசூர்யா, சுந்தரபாண்டி இருவரும் பல்வேறு கஞ்சா வழக்குகளில் தொடர்புடையவர்கள். எனவே இவர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரே பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரையை ஏற்று இவர்கள் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் முரளீதரன் உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகல் மதுரை மத்திய சிறையில் உள்ள அவர்களிடம் வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu