தேனியில் எரிவாயு சிலிண்டர் ஆலோசனை கூட்டம்

தேனியில் எரிவாயு சிலிண்டர் ஆலோசனை கூட்டம்
X

தேனி கலெக்டர் அலுவலகம் (பைல் படம்)

தேனி கலெக்டர் அலுவலகத்தில் 29ம் தேதி எரிவாயு சிலிண்டர் விநியோகம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

தேனி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் முரளீதரன் தலைமையில் வரும் நவம்பர் 29ம் தேதி வெள்ளிக்கிழமை எரிவாயு சிலிண்டர் விநியோகம் தொடர்பான ஆலோசனை மற்றும் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது.

இந்த கூட்டத்தில் கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் குழு, எரிவாயு நிறுவனங்களின் மேலாளர்கள், முகவர்கள் பங்கேற்கின்றனர். வாடிக்கையாளர்கள் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவித்து நிவர்த்தி பெறலாம் என தேனி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai healthcare products