தேனியில் டிச. 30ல் எரிவாயு சிலிண்டர் சப்ளை குறைதீர்க்கும் கூட்டம்

தேனியில் டிச. 30ல் எரிவாயு சிலிண்டர் சப்ளை குறைதீர்க்கும் கூட்டம்
X
தேனி கலெக்டர் அலுவலகத்தில் , டிசம்பர் 30ம் தேதி எரிவாயு சிலிண்டர் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.

தேனி கலெக்டர் அலுவலகத்தில், வரும் டிசம்பர் 30ம் தேதி வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு, கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் எரிவாயு சிலிண்டர் சப்ளை தொடர்பான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.

எரிவாயு நிறுவனங்களின் மேலாளர்கள், முகவர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்கின்றனர். பொதுமக்கள் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவித்து நிவர்த்தி பெறலாம் என, கலெக்டர் முரளீதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்