இந்து எழுச்சி முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோனை
தேனியில் விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டத்திற்கு முன்பாக கூட்ட அரங்கில் விநாயகர் வழிபாடு நடந்தது.
இந்து எழுச்சி முன்னணி நடத்தும் 9-ம் ஆண்டு ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம் தேனி பொம்மையகவுண்டன்பட்டியில் நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு இந்து எழுச்சி முன்னணி நிறுவனத்தலைவர் பொன் ரவி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் க.ராமராஜ் முன்னிலை வகித்தார். தேனி நகர தலைவர் செல்வபாண்டியன்நன்றியுரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியில் இந்து எழுச்சி முன்னணி தேனி, சின்னமனூர், கம்பம், பெரியகுளம் (மாவட்ட,ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள்) 300 மேற்ப்பட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம்: விநாயகர் சதுர்த்தி கமிட்டி பொறுப்பாளர்கள் விரதம் இருந்து விழாவில் கலந்துகொள்ள வேண்டும். தேனி நகர் பகுதிகளில் 150 க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் திருமேனிகளை வைத்து வழிபாடு செய்து விஸர்ஜனம் (கரைப்பு) செய்ய வேண்டும். விழாவினை மிக, மிக சிறப்புடன் கொண்டாட வேண்டும். விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தினை மிகவும் சிறப்பாகவும், நல்ல முறையிலும், அமைதியாகவும் நடத்திட வேண்டும். அரசின் சட்ட திட்டங்களுக்கும்,காவல்துறையின் வழிகாட்டுதலின் படி விழாவினை சிறப்பாக நடத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேனி நகர இந்து எழுச்சி முன்னணி பொறுப்பாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu