கம்பத்தில் பணம் பறிக்கும் சூதாட்ட கிளப்புகள்: போலீசார் 'கப்-சிப்'

கம்பத்தில் பணம் பறிக்கும் சூதாட்ட கிளப்புகள்: போலீசார் கப்-சிப்
X

கோப்பு படம் 

பணம் பறிக்கும் சூதாட்ட கிளப்புகள் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீசார் மவுனம் காப்பது ஏன் என்று பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டம், கம்பம் புதிய பஸ்ஸ்டாண்ட், பார்க்ரோடு, காந்திசிலை பகுதிகளில் தனியார் சூதாட்ட கிளப்புகள் உள்ளன. இங்கு தடை செய்யப்பட்ட வெட்டுச்சீட்டு, ரம்மி போன்ற விளையாட்டுகள் விளையாடப்படுகின்றன. சீட்டு விளையாட்டிற்கு அடிமையானவர்கள், பணத்திற்காக தங்கள் வீட்டில் உள்ள விலை உயர்ந்த கார், டூ வீலர், நகை மற்றும் பணத்தை எடுத்து வந்து விளையாடி இழந்து விடுகின்றனர்.

இப்படி பணம், பொருட்களை இழந்த சிலர் தற்கொலை கூட செய்துள்ளனர். இது பற்றிய சம்பவங்கள் அறிந்தும் போலீசார் தடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது பற்றி தெரிந்தும் போலீசார் மவுனம் காப்பது ஏன்? அனுமதியற்ற தனியார் சூதாட்ட விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Next Story
ai healthcare technology