தேனி உழவர்சந்தையில் பழங்களின் விலை சரிவு..!
தேனி உழவர்சந்தை பழக்கடை
கடந்த ஆண்டு முழுவதும் உச்சத்தில் இருந்த பழங்களின் விலை தற்போது சற்று கீழே இறங்கி வந்துள்ளது. கடந்த ஆண்டு மாதுளை பழம் ஒரு கிலோ 300 ரூபாயினை கடந்திருந்தது. அதுவும் முதல்தர மாதுளை விலை 400 ரூபாயினையும் எட்டியது. ஆப்பிள் விலையும் இதே அளவு இருந்தது. அத்தனை பழங்களும் இயல்புக்கு மாறாக விலை உயர்ந்து காணப்பட்டன.
கடந்த மாதம் சற்று இறங்கிய பழங்களின் விலை டிசம்பர் மாதம் மேலும் குறைந்துள்ளது. தேனி உழவர்சந்தையில் இன்று காலை ஆப்பிள் ஒரு கிலோ 200 ரூபாய் ஆகவும், மாதுளை 160 ரூபாய் ஆகவும் குறைந்தது. ஆரஞ்சு 120 ரூபாய் ஆகவும், சாத்துக்குடி 100 ரூபாய் ஆகவும், முலாம்பழம் 70 ரூபாய் ஆகவும், அன்னாசிப்பழம் 70 ரூபாய் ஆகவும், தைவான் கொய்யாப்பழம் 120 ரூபாய் ஆகவும், புரோக்கோலி 240 ரூபாய் ஆகவும், ஸ்ட்ராபெரி ஒரு பாக்ஸ் 120 ரூபாய் ஆகவும், பச்சை திராட்சை 200 ரூபாய் ஆகவும், சீத்தாப்பழம் 160 ரூபாய் ஆகவும், ஸ்வீட் கான் ஒன்று 20 ரூபாய் ஆகவும், தர்பூசணி, பப்பாளி பழங்கள் கிலோ 30 ரூபாய் ஆகவும், பன்னீர் திராட்சை 80 ரூபாய் ஆகவும் விற்கப்பட்டது.
வளர்ந்து வரும் உடல் ஆரோக்ய விழிப்புணர்வால் பழங்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது.அதனால் பழம் நுகர்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu