தேனி உழவர் சந்தையில் பழங்களின் விலை கடும் உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி

தேனி உழவர் சந்தையில் பழங்களின் விலை கடும்  உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி
X

பைல் படம்

தேனி உழவர்சந்தையில் பழங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்தனர்

தேனி உழவர்சந்தை மற்றும் தினசரி மார்க்கெட்டில் பழங்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

தேனி மார்க்கெட்டிற்கு பெரும்பாலும் பழங்கள் மதுரையில் இருந்தே வருகின்றன. மதுரை மார்க்கெட்டிற்கு வரத்து மிகவும் குறைந்துள்ளது. இதனால் பழங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு விலை உயர்ந்துள்ளது. இதனால் தேனி மார்க்கெட்டில் ஆப்பிள் ஒரு கிலோ 200 ரூபாய், ஆரஞ்சு கிலோ 140 ரூபாய், மாதுளை கிலோ 180 ரூபாய், திராட்சை கிலோ 160 ரூபாய், கொய்யாப்பழம் கிலோ 60 ரூபாய், பப்பாளி கிலோ 50 ரூபாய், சப்போட்டா கிலோ 50 ரூபாய் என கடுமையாக உயர்ந்துள்ளது. காய்கறிகளின் விலைகள் மிகுந்த கட்டுப்பாட்டிற்குள் வந்து விட்ட நிலையில் பழங்களின் விலைகள் கடுமையாக உயர்வதால், மக்கள் பழங்களை வாங்க தயக்கம் காட்டுகின்றனர். இதனால் விற்பனை டல்லாக உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story